பொருளாதார ஆய்வறிக்கை குறித்து மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

பொருளாதார ஆய்வறிக்கை குறித்து மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

புதுடில்லி, பிப்.1 நடப்பு 2021-2022 நிதியாண்டின் இறுதியில் கரோனாவுக்கு முந்தைய நிலைக்கு பொருளாதாரம் திரும்பும் என்று பொருளாதார ஆய் வறிக்கை கூறியுள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை குறித்து மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் .சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியி ருப்பதாவது:-

நடப்பு 2021-2022 நிதியாண்டின் இறுதியில் கரோனாவுக்கு முந்தைய நிலைக்கு பொருளாதாரம் திரும்பும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறியுள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால், 31.3.2022 அன்று ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 31.3.2020 அன்று இருந்ததுபோல் இருக்கும்.

அதாவது, 31.3.2020 அன்று நாம் இருந்த நிலைக்கு திரும்ப 2 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. இந்த 2 ஆண்டுகளில், லட்சக்கணக்கானோர் வேலை இழந் துள்ளனர். 84 சதவீத குடும்பங்கள், வருவாய் இழப்பை சம்பாதித்துள்ளன.

4 கோடியே 60 ஆயிரம் பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உலக பட்டினி குறியீட்டில் 116 நாடுகள் பட்டியலில் இந்தியா 104 ஆவது இடத்தில் உள்ளது.

எனவே, இது மனம் வருந்துவதற்கும், அணுகுமுறையை மாற்றுவதற்குமான நேரம். தற்பெருமைக்கும், மாற மாட் டோம் என்பதற்குமான நேரம் அல்ல.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment