கோவா சட்டசபை தேர்தலில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மிக அதிக இடங்களை பாஜக கிறித்துவர்களுக்கு ஒதுக்கி உள்ளது.
கோவாவில் கிறித்துவ வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதில் கோவா மாநில சட்ட சபை தேர்தல் தொடக்கத்தில் இருந்தே பல திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது.
எந்த சட்டமன்ற உறுப்பினர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்றே தெரியாத அளவில் நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சி மாறிக்கொண்டு இருக்கிறார்கள்; தேர்தல் முடிந்த பின் கட்சி மாற மாட்டேன் என்று கட்சித் தலைமைகள் சத்தியம் வாங்கும் அளவிற்கு அங்கு நிலைமை மோசமாகி உள்ளது. (வாழ்க ஜனநாயகம்!) பிப்ரவரி 14ஆம் தேதி கோவா மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடக்க உள்ளது.
இந்த நிலையில்தான் கோவாவில் பா.ஜ.க. இந்த முறை அதிக அளவு கிறித்துவ வேட்பாளர்களைக் களமிறக்கி உள்ளது. அங்கு இருக்கும் 40 தொகுதிகளிலும் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. இதில் 12 கிறித்துவ வேட்பாளர்களை பா.ஜ.க. களமிறக்கி உள்ளது. அதாவது மொத்த வேட்பாளர்களில் 30 சதவிகிதம் பேர் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள். இதற்கு முன் எந்த தேர் தலிலும் பா.ஜ.க. இத்தனை கிறித்துவ வேட்பாளர்களைக் களமிறக் கியது கிடையாது. கடந்த 2012 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 6 கிறித்துவ வேட்பாளர்களை களமிறக்கியது. பா.ஜ.க. அப்போது களமிறக்கிய 6 பேருமே அந்த தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.
2017 சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. 7 கிறித்துவ வேட்பாளர்களைக் களமிறக்கியது. அதேபோல் அந்த தேர்தலிலும் பா.ஜ.க. களமிறக்கிய 7 கிறித்துவ வேட்பாளர் களும் வெற்றி பெற்றனர். பா.ஜ.க.விற்கு அங்கு கிறித்துவ வேட்பாளர்கள் எப்போதுமே வெற்றிகரமான போட்டியா ளர்களாக இருந்துள்ளனர். கோவா மாநில பா.ஜ.க.வில் அடிப்படை உறுப் பினர்களாக 3.5 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள். இதில் 18 சதவிகிதம் பேர் கிறித்துவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கோவாவில் மொத்த மக்கள் தொகையில் 66 சதவிகிதம் பேர் இந்துக்கள். 25 சதவிகிதம் பேர் கிறித்துவர்கள். அங்கு 20 தொகுதிகளில் கிறித்து வர்கள்தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்துத்துவ அமைப்புகளும் - தமிழ்நாடு பா.ஜ.க.வும் தஞ்சை பள்ளி மாணவியின் மரணத்தை அரசியலாக்கி கிறித்தவர்களுக்கு எதிராக நச்சுக்கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். மதமாற்றத்திற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையிலும் பா.ஜ.க.வினர் மாநிலம் முழுவதிலும் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து கோவை, மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் கிறித்துவ வழிபாட்டுத் தலங்கள் சிதைக்கப்படுவதும் கிறித்துவ போதகர்கள் தாக்குதலுக்கு ஆளாகிவருவதும் கண் கூடு!
மத்தியப் பிரதேசம், அரியானா உள்ளிட்ட பல மாநி லங்களில் பா.ஜ.க.வினர் கிறித்துவ வழிபாட்டுத்தலங்களை தாக்கி வருகின்றனர். ஆனால் கோவாவில் பா.ஜ.க. சார்பில் கிறித்துவ வேட்பாளர்களை அதிமாக இறக்கித் தேர்தலில் வெற்றி பெற நாடகம் ஆடுகிறது.
ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமான பா.ஜ.க.வின் இரட்டை வேடம் அருவருப்பானது. இந்து ராஜ்ஜியத்தை அமைப்போம் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டு மற்ற மதத்தினர் குடியுரிமையின்றி வாழ வேண்டும் ("கோல்வால்கரின் வரையறுக்கப்பட்ட நமது தேசியம்") என்று கூறும் ஒரு கட்சி கோவாவில் 40 இடங்களில் 12 கிறித்துவர்களுக்கு - அதாவது 30 விழுக்காடு இடங்களை அளித்திருப்பது எதைக் காட்டுகிறது?
உலக கத்தோலிக்க மக்களின் தலைவரும், வாடிகன் ஆட்சித் தலைவருமான போப் இரண்டாம் ஜான்பால் இந்தியா வந்தபோது, அவரது கொடும்பாவிகளை எரித்த வர்களா கோவாவில் கிறித்துவர்கள்மீது காதல் கொள்வது?
விசுவ ஹிந்து பரிசத்தின் அகில உலகத் தலைவர் அசோக்சிங்கால் என்ன கூறினார் தெரியுமா?
"சோனியாவைப் பிரதமராக்கி, அதன் மூலம் இந்தி யாவை மறைமுக ஆட்சி செய்ய போப் பாண்டவர் விரும்புகிறார்" (தினமலர் 16.6.1999) இந்தத் தன்மை உள்ளவர்கள்தான் கோவாவில் கிறித்துவர்களைத் தாஜா செய்யும் தந்திரத்தில் ஈடுபடுகின்றனர்.
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
No comments:
Post a Comment