சென்னை, பிப்.8 தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12 ஆயிரத்து 838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், பிப்.19ஆம் தேதி ஒரேகட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜன.28ஆம் தேதி தொடங்கி, பிப்.4ஆம் தேதி நிறைவடைந்தது.
மாநகராட்சி வார்டுகளுக்கு 14 ஆயிரத்து 701 மனுக்கள், நகராட்சி வார்டுகளுக்கு 23 ஆயிரத்து 354 மனுக்கள், பேரூராட்சி வார்டுகளுக்கு 36 ஆயிரத்து 361 வேட்புமனுக்கள் என மொத்தம் 74 ஆயிரத்து 416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன.
இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, கடந்த 5ஆம் தேதி நடந்தது. முறையாக பூர்த்தி செய்யப்படாத, உரிய ஆவணங்களை இணைக்காத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மனுக்களை திரும்பப் பெற நேற்று (7.2.2022) மாலை 3 மணிவரை வேட்பாளர் களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. மாற்று வேட்பாளராக மனு செய்திருந் தவர்கள், அதை திரும்பப் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து நேற்று (7.2.2022) மாலை இறுதி வேட்பா ளர்கள் பட்டியல் அறிவிக்கப் பட்டது. அத்துடன் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங் களும் ஒதுக்கப்பட்டன. சில வார்டுகளில் ஒருவர் மட்டுமே மனு செய்திருந்ததால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு ஏற்கெனவே பிரச்சாரத்தை தெடங்கிவிட்டனர். தற்பேது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரடி பிரச் சாரத்தை தவிர்த்து காணொலி வாயிலாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் மற்றும் விதிமீறல்களை மாவட்ட அளவில் கண்காணிக்க 40 பார்வை யாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டார அளவில் நடக்கும் தேர்தல் பணிகளை கண்காணித்து மாவட்ட பார்வையாளர்களுக்கு தெரிவிக்க 697 வட்டார பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 4-ஆம் தேதி முதலே கண் காணிப்புப் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.
ஒரு மாநகராட்சி மண்டலத்துக்கு ஒரு பறக்கும் படை, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு தலா ஒரு பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு பறக்கும் படையிலும் ஒரு செயல் குற்றவியல் நீதிபதி, 2 அல்லது 3 காவல்துறையினர், ஒரு காட்சிப் பதிவாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த பறக்கும் படைகள், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 8 மணி நேரத்துக்கு ஒருமுறை குழுக்கள் மாறும் வகை யில் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. மொத்தம் 1,650 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 550 குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர் தல் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர் களிடம் இருந்து புகார்களை பெறு வதற்காக சென்னை கோயம் பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரை தளத்தில் 24 மணி நேரமும் இயங்கும் புகார் மய்யம் கடந்த 27ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இப்புகார் மய்யங்களை 18004257072, 18004257073, 18004257074 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
பிரச்சாரம் 17ஆம் தேதி மாலை யுடன் நிறைவடைகிறது. 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
No comments:
Post a Comment