அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய அழைப்பு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 8, 2022

அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய அழைப்பு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சோனியா காந்தி, டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, முப்தி உள்ளிட்ட தலைவர்களிடம் டி.ஆர்.பாலு அளித்தார்

காங்கிரசு கட்சியின் பிரதிநிதியாக வீரப்ப மொய்லி நியமனம்

புதுடில்லி, பிப். 7- அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்து, தி.மு.. தலை வரும்  தமிழ்நாடு முதலமைச்சருமான மு..ஸ்டாலின் நாடுதழுவிய அள வில் தலைவர்களுக்கு எழுதிய கடி தத்தை தலைவர்களை நேரில் சந் தித்து தி.மு.. பொருளாளரும் நாடா ளுமன்ற மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு  ஒப்ப டைத்தார்.

சோனியா காந்தி

திமுக தலைவர் முதலமைச்சர் மு..ஸ்டாலின் கடிதத்தை இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலை வர் சோனியா காந்தியிடம் டிஆர். பாலு ஒப்படைத்தார். உடனடி யாக, சோனியா காந்தி, அனைத் திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை நியமித்து, தி.மு.. தலைவர் முதலமைச்சர் மு..ஸ்டாலினுக்குப் பதில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இச்சந்திப் பின்போது, ராகுல் காந்தி அவர் களும் உடனிருந்தார்.

து.ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா திமுக தலைவர் முதலமைச்சர் மு..ஸ்டாலினுக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்க தானும், தான் சார்ந்த இயக்கமும் ஜனநாயக - மதச்சார்பற்ற முற்போக் குச் சக்திகளுடன் இணைவதாகவும், இதுகுறித்து. நேரில் கலந்தாலோ சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சீதாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமூகநீதிக் கருத்தியலை தேசிய அளவில் முன்னெடுப்பதற் காக வாழ்த்து தெரிவித்து, இந்த அமைப்பினை எப்படி முன்னெடுத் துச் செல்வது என்பது குறித்து நாம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மெகபூபா முஃப்தி

மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி எழுதி யுள்ள பதில் கடிதத்தில், இந்த முன் னெடுப்பினைப் பாராட்டி, இதற்கு மக்கள் ஜனநாயகக் கட்சி முழு ஒத்துழைப்பினை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment