சென்னை, பிப். 1- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன.
இந்த நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக ஒன்றிய அரசு 1954இல் ‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம்’ என்ற அமைப்பைத் தொடங்கியது.
ஒன்றிய குறு, சிறு தொழில்கள் அமைச்சகத்தின் கட்டுப் பாட்டில் இயங்கும் இந்த அமைப்பு, தொழில்முனைவோ ருக்கான மேம்பாட்டு பயிற்சிகள், திறன் வளர்ப்பு பயிற்சி, நிறுவன பதிவு, வாங்குபவர் விற்பவர் கூட்டங்கள் ஒருங் கிணைப்பு, தொழில்துறை சார்ந்த அறிக்கைகள், சந்தை உதவி, கருத்தரங்குகள், தொழில்நுட்ப ஆலோசனை, திட்ட அறிக்கை தயரிப்பில் உதவி, பொதுவான பயிற்சி வகுப்புகள் போன்ற பல நிலைகளில் தொழில் முனை வோர்களுக்கு உதவிகரமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்கான மண்டல அலுவல கங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நான்கு இடங்களில் இதன் மண்டல அலுவலகங்கள் உள்ளன.
காலத்துக்கு ஏற்ற நவீன தொழில் பயிற்சிகளை இந்த நிறுவனம் அளித்து வருவது, தொழில் முனைவோர்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக உள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறை சார்ந்த தொழில்கள் மட்டுமில்லாமல் சேவைத்துறை சார்ந்த பயிற்சிகளையும் அளித்து வருகிறது.
இந்த நிறுவனம் தற்போது நகைமதிப்பீட்டாளர்களுக் கான பயிற்சியை அளிக்க உள்ளது. இதற்கான கட்டணம் ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 18 வயதுக்கு மேல்-குறைந்தபட்ச கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு.
பயிற்சி விபரம்: தங்கத்தின் அடிப்படை உலோகவியல், பொடி, தங்கத்தின் தரம் மற்றும் போலி நகைகளைக் கண்டறிதல், நிகர எடை கணக்கீடு செய்தல்.
இதன் நன்மைகள்: நகைக்கடை மற்றும் அடகுக்கடை தொழில் தொடங்கவும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங் களில் தங்க நகை மதிப்பீட்டாளராக பணியாற்றவும் தரமான நகைகள் வாங்கவும் உதவும்.
பிப்ரவரி 9 முதல் 12 வரை இந்த பயிற்சி நடைபெறும்.
விபரங்களுக்கு: சென்னை, கிண்டி ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனம் - என்ற முகவரியில் அணுகவும்.
தொடர்பு எண்: 9652611022, 8807700611, 8807700699
No comments:
Post a Comment