இது உண்மையா? இரண்டு பல்கலைக் கழகத் துணைவேந்தர்களாக காவி ஆதரவாளர்களை நியமிக்க உத்தேசமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 8, 2022

இது உண்மையா? இரண்டு பல்கலைக் கழகத் துணைவேந்தர்களாக காவி ஆதரவாளர்களை நியமிக்க உத்தேசமா?

உயர்கல்வித் துறையின் ஒரு கண்காணிப் போடு இயங்கும் பல்கலைக் கழகங்களுக்கு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில்  உள்ள பல்கலைக் கழகங்களின்  'exofficio' -சான்ஸ்லர் ஆக இருப்பதைப் பயன்படுத்தி பல்கலைக் கழக கல்விக் கூடங்களை, காவிக் கூடங்களாக்கிடும் போக்கு கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்யப்படுகிறது.

கேரளத்திலும், மேற்கு வங்காளத்திலும் இதனால்  அரசுக்கும் - ஆளுநர் நடவடிக்கைக் கும் எதிராக சட்டத் திருத்தம் கொண்டுவர நடவடிக்கைகள் தொடர்கின்றன.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத் திலும்கூட அண்மையில் காவிச் சிந்தனை யாளரான ஒரு பெண்மணி துணைவேந்தராக நியமனம் பெற்று, விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

தமிழ்நாட்டிலும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கும், கோவை வேளாண்மை பல் கலைக் கழகத்திற்கும் விரைவில் நியமிக்கப்பட விருக்கும் துணைவேந்தர்களாக மீண்டும் காவிச் சிந்தனையாளர்கள் - காவி அமைப்பு களோடு நெருக்கமாக உள்ளவர்களை நியமிக்க ஆளுநர்மூலமாக தீவிர முயற்சிகள் நடை பெறுவது உண்மையா?

தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு கல்வியாளர்களின் குமுற லுக்கு எப்படி பரிகாரம் தேடப் போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்!

வேகமான காவி மயத்தை மாநில அரசு வேடிக்கை பார்க்கப் போகிறதா?

No comments:

Post a Comment