மும்பை, பிப்.10- குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் நாடு முழுவதும் கரோனாவைப் பரப்பினர் என்று குற்றம் சாட்டினார். குறிப்பாக மகாராட்டிராவின் மகா விகாஸ் அகாதி அரசு மீது பழிபோட்டார். இதற்கு தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யும், அக்கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே பதி லடி கொடுத்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 18 இடங்களில் வெற்றியைத் தந்தது மகாராஷ்டிர மாநிலம். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தொடாந்து மகாராட்டிரத்துக்கு எதிராக வெறுப்புணர்வுடன் பேசி வருகிறார். இந்திய ரயில்வே புள்ளிவிவரங்களின்படி கரோனா காலத்தில் வெளிமாநிலத் தொழிலா ளர்கள் வெளியேறுவதற்காக குஜராத்தில் இருந்து 1,033 ரயில்களும், மகாராட்டிரத்தில் இருந்து 817 ரயில்களும் இயக்கப்பட்டன. உண்மை இவ்வாறு இருக்க வெளிமாநிலத் தொழி லாளர்கள் வெளியேற்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் வீண் பழி சுமத்துகிறார் என்று அவர் கூறியுள்ளார். வேலையின்மை, விலைவாசி உயர்வு என முக்கிய பிரச்சினைகள் பல இருக்கின்றன. ஆனால், அவையில் தனது குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக பிரதமர் உரையாற்றியுள்ளார். தான் இந்தியாவுக்கு பிரதமர், தனது கட்சிக்கு மட்டும் பிரதமர் அல்ல! என்பதை அவர் உணர வேண்டும் என்றும் சுலே கண்டித்துள்ளார்.
Thursday, February 10, 2022
Home
இந்தியா
கரோனா பரவலின் போது குஜராத்திலிருந்துதான் அதிகமான தொழிலாளர் வெளியேறினர்!: மோடிக்கு தேசியவாதக் காங்கிரஸ் கட்சி பதிலடி
கரோனா பரவலின் போது குஜராத்திலிருந்துதான் அதிகமான தொழிலாளர் வெளியேறினர்!: மோடிக்கு தேசியவாதக் காங்கிரஸ் கட்சி பதிலடி
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment