புதுச்சேரி, பிப்.6 புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் நாளை முதல் முன்பதிவின்றி வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் நேரடி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஜிப்மர்
மருத்துவமனையில் நாளை (7.2.2022) முதல் முன்பதிவின்றி வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் நேரடி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கரோனா
தொற்று பரவலை தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக வெளிப்புற சிகிச்சைக்கு வருபவர்கள் முன்பதிவு செய்துவிட்டு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஒவ்வொரு
துறையிலும் நாள்தோறும் 50 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நோயாளிகள் பலரும் இந்த விவரம் தெரியாமல் ஜிப்மருக்கு நேரடியாக வந்து கடும் அவதியடைந்தனர். இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின.
இந்தநிலையில்
ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு முன்பதிவின்றி நேரடியாக வரலாம் என்று ஜிப்மர் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கரோனா
பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால், தொற்று பரவுவதை தடுக்க ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுகளுக்கு அமல்படுத்தப்பட்ட விதிமுறைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்த்தப்படுகின்றன. நோயாளிகள் முன்பதிவு இன்றி நேரடியாக வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வரலாம்.
முன்பதிவு
மற்றும் தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவைகள் நாளை முதல் நிறுத்தப்படும். நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் தேவையான அனைத்து கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டும்.
அதாவது
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நோயாளிகள் மற்றும் உறவினர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் தடுப்பூசி ஒமைக்ரான் வகை மாறுபாட்டிற்கு எதிராக கூட பாதுகாப்பை அளிக்கிறது.
இவ்வாறு
அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முதுகலை
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான
நுழைவுச்சீட்டு
வெளியீடு
சென்னை,
பிப்.6 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கணினி வழித்தேர்வுக்கு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டது.
முதுகலை
பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுனர்கள் நிலை-1இல் இருக்கும் 2020-2021 காலிப்பணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வு வருகிற 12ஆம்தேதி முதல் 15ஆம்தேதி வரையிலும், 16ஆம்தேதி முதல் 20ஆம்தேதி வரையிலும் என 2 அட்டவணைகளில் நடக்க இருக்கிறது.
இந்த
தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவு சீட்டினை நகல் எடுத்து தேர்வு மய்யத்திற்கு எடுத்து செல்வதோடு, அதனுடன் அசல் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்த ஒளிப்படத்தின் அசல் பிரதியையும் கொண்டு செல்ல வேண்டும். நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை தேர்வர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நுழைவுச்சீட்டு 2 கட்டங்களாக வெளியிடப்படும். முதலில் மாவட்ட அளவில் நுழைவுச்சீட்டும், அதனைத்தொடர்ந்து தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு தேர்வு மய்ய நுழைவுச்சீட்டும் வெளியிடப்பட இருக்கிறது. அதற்கான முழு விவரங்கள் ஆசிரியர்
தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
மேற்கண்ட
தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment