* மனித வாழ்வு என்பது சமுதாய வாழ்வு; அதாவது மற்ற மக்களோடு சேர்ந்து வாழ்வதாகும். அப்படிப்பட்ட மனித வாழ்விற்கு வேண்டிய ஒவ்வொரு சாதனமும் தன் ஒருவனாலேயே செய்துகொள்ளக் கூடியதாய் இல்லாமல் மற்றவர்களது கூட்டு முயற்சியால் கூட்டுச் செயலாலேயே முடிக்கக் கூடியதாயும் இருக்கிறபடியால் மனித வாழ்வு என்பது தனக்கெனவே என்பதாயில்லாமல் பிறருக்காகவும் பாடுபட்டே வாழவேண்டிய வாழ்வாக இருக்கிறது. - தந்தை பெரியார்
இனிய காலை வணக்கம்
* மனிதன் பகுத்தறிவுவாதி; வளர்ச்சிக்கு உரியவன். அவன், வாழ்க்கையைச் சுமையாக, அமைத்துக் கொள்ளக் கூடாது. மனிதச் சுதந்திரத்திற்கும் கவலையற்று வாழ்வதற்கும் ஏற்ற முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும்... எனவே, மனித வாழ்வு பெண்டாட்டி கட்டிக் கொண்டு குட்டி போட்டுக் கொண்டு, காப்பாற்ற மட்டும் என்று எண்ணாமல், மனிதச் சமுதாய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபடுவதுதான் என்பதை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும்.
No comments:
Post a Comment