அரசு விரைவுப் பேருந்துகள் நிற்க வேண்டிய உணவகங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 6, 2022

அரசு விரைவுப் பேருந்துகள் நிற்க வேண்டிய உணவகங்கள்

 போக்குவரத்து நிர்வாகம் அறிவிப்பு

சென்னை, பிப்.6 அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் நீண்ட தூர பேருந்து சேவை வழங் கப்பட்டு வருகிறது.  இதில் தினசரி ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பேருந்துகள் தொடர்ந்து நீண்ட நேரம் இயக்கப்படுவதால், பயணிகளின் நலன் கருதி சாலை யோர உணவகங்களில் நிறுத்தப்படு வது வழக்கம்.

திருச்சி, சேலம் மார்க்கமாக செல் லும் பேருந்துகள் விக்கிரவாண்டி உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்படு வது வழக்கம். இந்த வழித்தடங்களில் கூடுதல் விலைக்கு உணவுகள் விற் பனை செய்யப்படுவதாக பொதுமக்க ளிடம் இருந்து அரசுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து சம்பந்தப் பட்ட இடங்களில் பேருந்துகளை நிறுத்த போக்குவரத்துத்துறை தடை விதித்தது.

இதையடுத்து  சென்னையில் இருந்து சேலம், திருச்சி மார்க்கமாக செல்லும் விரைவுப்  பேருந்துகள் நிற்க வேண்டிய புதிய உணவகங்கள் குறித்த விவரத்தை, அரசு விரைவுப்  போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில், அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்ற றிக்கையில்கூறப்பட்டுள்ள

தாவது:

சென்னையில் இருந்து சேலம், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிறுத்துவதற்கு வசதி யாக 18 உணவகங்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த உணவகங்களில் பயணிகள் உணவு மற்றும் இயற்கை உபாதை களுக்காக தற்போது நிறுத்த பணி மனை வாரியாக ஒதுக் கீடு செய்யப் பட்டுள்ளது.

இவற்றில் எந்தவித புகாருமின்றி பேருந்துகளை நிறுத்தி செல்ல அனைத்து ஓட்டுநர், நடத்துனர்கள் இதன் மூலம் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

இதனை கிளை மேலாளர்கள், கோட்ட மேலா ளர்கள், துணை மேலாளர்கள் (இயக்கம்) மற்றும் அனைத்து உதவி மேலாளர்கள் ஆகியோர் எந்தவித குறைபாடுமின்றி செயல்படுத்த வேண்டும்.

இந்த ஒதுக்கீட்டின் விவரத்தை துணை மேலாளர் (இயக்கம்) மற்றும் உதவி மேலாளர் (இயக்கம்) கோயம்பேடுக்கு தினசரி அந்தந்த உணவகத்திற்கும் மற்றும் உதவி மேலாளர் (இயக்கம்), விழுப்புரம் ஆகியோருக்கும் தெரிவிக்க வேண்டும். பல்வேறு இடங்களில் இருந்து சென்னை நோக்கி இயக் கப்படும் பேருந்துகள் தற்போது உளுந்தூர்பேட்டை-விழுப்புரம் இடையே அமைந்துள்ள தனியார் உணவகத்தில் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினசரி இருபுறமும் பேருந்து இயக்கிய விவரம், உணவகத்தில் நின்ற விவரம் பணிமனை வாரியாக கைபேசி செயலி மூலம் அனைத்து கிளை மேலாளர்களும் தலைமை யகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

விழுப்புரம் உதவி மேலாளர், பணி மனை வாரியாக சம்பந்தப்பட்ட உணவகத்தில் நின்ற பேருந்துகளின் விவரத்தை தினசரி தெரிவிக்க வேண்டும். எனவே அனைத்து கிளை மேலாளர்களும் சம்பந்தப் பட்ட உணவகங்களில் பேருந்தை நிறுத்த தக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment