கோவை, பிப்.1- அண்ணல் காந்தியார் நினைவுநாளில் கோவை யில் மரியாதை செலுத்திய 23 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறி கூட்டம் கூடிய தாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை, சிவானந்தா காலனியில், கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில், காந்தியார் நினைவு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் சி.பத்மநாபன், கு.ராம கிருட்டிணன் உள்ளிட்ட மார்க்சிய, பெரியாரிய அம்பேத் கரிய அமைப்பு களின் தலைவர்கள் பங்கேற்ற னர். முன்னதாக, காவல்துறையின் அனு மதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட பிறகே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இருப்பினும் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் விசுவாசி களாக உள்ள சில காவலர்கள் இந் நிகழ்வை திட்டமிட்டபடி நடை பெறாமல் தடுக்க பல்வேறு இடை யூறுகளை ஏற்படுத்தினர். மேலும், உச்சத்துக்கே சென்ற காவல் துறை யினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசிக் கொண்டிருந்த ஒலிவாங்கியை (மைக்) பிடுங்கச் சென்றனர். இதன் காரணமாக இரண்டு மணி நேரத் துக்கும் மேலாக காவல்துறையின ருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மதவெறியர் களால் காந்தி சுட்டுக் கொல்லப்பட் டார் என்கிற வாச கத்தை அகற்றியே ஆகவேண்டும் என காவல்துறையினர் பிடிவாதமாக இருந்தனர். இதனையடுத்து சில சமரசங்களுக்கு பின்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கை பல்வேறு தரப்பினரையும் அதிர்ச் சிக்கு உள்ளாக்கியது.
பல்வேறு தலைவர்கள் காவல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக் கையை வெளியிட்டனர். இந்நிலை யில், காவல் துறையினர் தங்களை நியாயவாதிகளாக காட்டிக் கொள்ள மரியாதை செலுத்த வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்ம நாபன் உள்ளிட்ட 23 தலை வர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் பறக்கும்படை அலுவலர் சுரேஷ் குமாரிடம் ரத்தினபுரி காவல் நிலையத்தினர் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்துள்ள னர். இதில், தேர்தல் விதிமுறையை மீறி கூட்டம் கூடியதாகவும், கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாகவும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment