‘நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 8, 2022

‘நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக்கூட்டம்

நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும்

மசோதா மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றம் - இன்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்

பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு

சென்னை,பிப்.8- தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏற்கெனவே நிறை வேற்றப்பட்ட நீட் விலக்கு மசோ தாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பியது குறித்து கடந்த 5ஆம் தேதி தமிழ் நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடை பெற்றது.

அப்போது மீண்டும் சட்டப் பேரவையைக் கூட்டி நீட்விலக்கு மசோதாவை  நிறைவேற்றி ஆளு நருக்கு அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப் படையில்  8ஆம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்திருந்தார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டம்  அதன்படி இன்று (8.2.2022) காலை 10 மணிக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது.  கூட்டம் தொடங்கி யதும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆளுநர் அனுப்பிய அறிக்கையை முழுவதுமாக அரங் கிற்கு படித்துக் காட்டினார்.

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்நீட்தேர்விலி ருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதாவை முன்மொழிந்து உரையாற்றினார்.

சட்டமன்ற கட்சி தலைவர் களான பூவை ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரத கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), .ஆர்.ஈஸ்வரன் (கொங்கு நாட்டு மக்கள் கட்சி), பேராசிரியர் ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), சதன் திருமலைகுமார் (மதிமுக), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), நாகைமாலி (இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), எஸ்.எஸ்.பாலாஜி (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (பா...), செல்வப் பெருந்தகை (காங்கிரஸ் கட்சி), டாக்டர் விஜய்பாஸ்கர் (அதிமுக) ஆகியோர்நீட்தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதாவை ஆதரித்துப் பேசினர்.

முன்னதாக பா... சட்டப் பேரவை உறுப்பினர்கள் இத்தீர்மானத்தின்மீது பேசாமல் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள்நீட்தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா 13.9.2021 அன்று சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பெற்று, ஆளுநர் அவர்களால் 1.2.2022 நாளன்று திருப்பி அனுப்பப்பெற்றது. 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டமுன் வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன் வடிவு எண். 43/2021) மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பெற வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து குரல் வாக் கெடுப்புக்கு தீர்மானம் விடப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் இன்றே தமிழ் நாடு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் நீட் விலக்கு கோரும் மசோதாமீதான தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நேரலையில் ஒளிப்பரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment