சென்னை, பிப்.7 நிலத்தடி நீர், அணை, ஏரிகளின் நீர் தரத்தை உடனுக்குடன் அறியும் வகையில், சம்பவ இடத்துக்கே நேரில் சென்று ஆய்வு செய்யும் வகையிலான நீரின் தரத்தை கண்டறியும் கருவிகள் அடங்கிய 3 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 90 அணைகள், 14,038 ஏரிகள் உள்ளன. இதில், 90 அணைகள் மற்றும் முக்கியமான ஏரிகளில் இருந்துதான் குடிநீர் தேவைக்காக நீர் விடுக்கப்படுகிறது. அவ்வாறு பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் குடிநீரின் தரம் குறித்து அறிய, மாநில நிலவள நீர்வள ஆதார விவர குறிப்பு மய்யத்துக்கு நீரின் மாதிரிகளை அனுப்ப வேண்டும். இதன் சோதனை முடிவு வருவதற்கு தாம தம் ஏற்படும்போது அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கும் நிலை உள்ளது.
இந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் வகையில் மாநில நிலவள, நீர்வள ஆதார விவர குறிப்பு மய்யம் சார்பில் நீரின் தரத்தை கண்டறியும் கருவிகளை கொண்ட 3 வாகனங்கள் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் மூலம் ஏரி, அணைகளின் நீரின் தரம் குறித் தும் சந்தேகம் ஏற்பட்டாலோ, நிலத்தடி நீரில் மாற்றம் இருந்தாலோ அதுதொடர்பாக மாநில நிலவள நீர்வள ஆதார விவர மய்யத்திடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கே வாகனங் களை அனுப்பி நீரின் தரத்தை உடனுக்குடன் சோதித்து உடனடியாக அறிக்கை தருகின்றனர். அந்த நீர் குடிக்க உகந்ததுதானா அல்லது பயன்படுத்த தகுதி அற்றதா என்பதை உடனே பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். தற்போது முதற்கட்ட மாக தமிழ் நாட்டில் 3 வாகனங்கள் வாங்கப் பட்டுள்ள நிலையில் விரைவில் கூடுதலாக வாகனங்கள் வாங்க நீர்வளத் துறை முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment