பழம் பறிக்கும் ட்ரோன்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 10, 2022

பழம் பறிக்கும் ட்ரோன்கள்

நவீன தொழில்நுட்பங்களை வேளாண்மைக்குப் பயன்படுத்துவதில் இஸ்ரேலியர்கள் கில்லாடிகள். அங்கே பழத்தோட்டங்களில் அறுவடைக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதை சமாளிக்க, 'டெவெல் ஏரோபாடிக்சி'ன் ஆராய்ச்சியாளர்கள், புது வழியை உருவாக்கியுள்ளனர்.

அந்த வழி: பழம் பறிக்கும் ட்ரோன்கள்! பறக்கும் தானியங்கி ட்ரோன்கள், மரத்தில் பழம் பறிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு மூளையையும், கணினிப் பார்வைத் திறன் கொண்ட கேமிராக்களையும் பயன்படுத்துகின்றன. தோட்டத்தில் இரு பக்கமும் பழமரங்கள் இருக்க, நடுவே ஒரு சிறிய சேகரிப்பு வாகனம் செல்கிறது.

அந்த வாகனத்திலேயே ட்ரோன்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் மின்கலனும் உள்ளது. ஒரு மின் கம்பி மூலம் வண்டியுடன் இணைக்கப்பட்டுள்ள சில ட்ரோகள், தங்கள் நான்கு விசிறிகளால் லாவகமாக, மேலும் கீழுமாக பறந்து, பழமரங்களை பார்வையிடமுடியும்.

பழுத்த பழத்தை கண்டுபிடித்து, அதை மட்டுமே ட்ரோன்கள் பறிக்கின்றன.பழத்தை சேதாரமின்றிப் பறிப்பதற்கு ஒரு ரோபோ கரம், ட்ரோனோடு இணைக்கப்பட்டுள்ளது.பழத்தைப் பறித்ததும், வண்டியின் பின்புறம் சேகரிப்புப் பெட்டியில் மெதுவாக வைத்துவிட்டு மீண்டும் மரத்திலுள்ள பிற பழங்களை பறிக்க ஆலாய் பறக்கின்றன இந்த ட்ரோன்கள். இப்படியே வண்டியுடன் ஊர்ந்து சென்று, ராப்பகலாக பழத்தை பறிக்கும் திறன் கொண்டவை டெவேலின் ட்ரோன்கள்.

இஸ்ரேலில் சோதனை வெற்றியை அடுத்து, ஸ்பெயின், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் ஆப்பிள் தோட்டங்களில் இரண்டாம் கட்ட வெள்ளோடத்திற்காக டெவெலின் ட்ரோன்கள் பறக்கவிருக்கின்றன

No comments:

Post a Comment