மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, பிப்.7 தமிழ்நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1, 2ஆம் நிலையில் இருப்பவர்களைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்கும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் 21ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் 5.2.2022 அன்று நடைபெற்றது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத் துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை இயக்குநர் ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய தாவது:
தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9.60 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 90.48 சதவீதம் பேர் முதல் தவணை, 69.33 சதவீதம் பேர் 2ஆவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குமாறு முதலமைச்சர் வலியுறுத்தி வருகிறார். 10 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் கோபால்ட், லினாக் போன்ற அதிநவீன சிகிச்சைகளை அளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் களில் 1, 2ஆம் நிலைகளில்உள்ளவர் களைக் கண்டறிந்தால்,அவர்களது உயி ரைக் காப்பாற்றிவிடலாம்.
எனவே, தமிழ் நாட்டில் 1, 2ஆம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்கும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் புற்றுநோயால் இறப்ப வர்களின் எண்ணிக்கை குறையும்.
தமிழ்நாட்டில் புற்றுநோய் மருத் துவமனைகளை மேம்படுத்த திட்டமிடப் பட்டு, காஞ்சிபுரம், திருச்சி,மதுரை, நாகர்கோவில் மாவட்டங்களில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2021 டிச. 18இல் தொடங்கப்பட்ட நம்மைக் காக்கும் 48 திட்டத்தின்கீழ் விபத்தில் பாதிக்கப்பட்ட 13,636 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.12.94 கோடி செல வழிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2021 ஆக.5ஆம் தேதி தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 48 லட்சத்து 30,341 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதிமுகவினர் புறக்கணித்துள்ளதைப்போல, மக்களும் அவர்களைப் புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment