பானாஜி பிப் 9 கரோனாவை காங்கிரஸ் பரப்பியதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத் துள்ளார். "கரோனா காலத்தில் உங்கள் பெரிய பொதுக்கூட் டங்கள் பற்றி என்ன சொல்கிறார்'' என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசிய போது, "கரோனா முதல் அலையின்போது மும்பை புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரயில் பயணச்சீட்டை காங்கிரஸ் வழங்கியது. அதேநேரத்தில் டில்லி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆம்ஆத்மி அரசு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தது. இதனால் தான் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கரோனா பரவியது'' என்றார்.
இதற்கு நேற்று (8.2.2022) காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிலளித்தார். கோவா பானாஜியில் அவர் பிரதமர் மோடியை தாக்கி பேசினார். பிரியங்கா கூறியதாவது: புலம்பெயர் தொழி லாளர்களுக்கு உதவாமல் பிரதமர் மோடி கைவிட்டார். இதனால் அவர்கள் சொந்தஊர் செல்ல முடியாமல் தவித்தனர். கால்வலிக்க நடந்தே ஊர் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் உதவி செய்தோம். பிறருக்கு உதவி செய்யாத மோடி, உதவி செய்வோரையும் குற்றம் சாட்டுகிறார்'' என பதிலளித்தார்
மேலும், "புலம்பெயர் தொழிலாளர்களுக்கு யாரும் உதவக்கூடாது என பிரதமர் மோடி நினைக்கிறாரா. இல்லை, வேறு ஏதேனும் கூற விரும்புகிறாரா. மோடி என்ன சொல்ல விரும்புகிறார். கரோனா காலத்தில் அவர் பங்கேற்ற பெரிய பொதுக்கூட்டங்கள் பற்றி என்ன சொல்கிறார்'' என கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment