தி.மு.க. கூட்டணி கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் முழக்கம்
புதுடில்லி, பிப். 1- நாடாளுமன்றத்தின் நிதிநிலைக்கான கூட்டத் தொடர் நேற்று (31.1.2022) தொடங்கியது. 2022 ஆம் ஆண்டுக் கான நிதிநிலைக்கான கூட்டத்தொடரின் முதல் நாளில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் உரையாற்றத் தொடங்குவதற்கு முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து முழக்க மிட்டனர்.
No comments:
Post a Comment