உலகின் நீளமான மின்னல் வெட்டு எங்கே நிகழ்ந்தது தெரியுமா? கடந்த 2020 ஏப்ரலில், அமெரிக்காவில் மூன்று மாநிலங்களுக்குத் தெரியும்படி நிகழ்ந்த இடி மின்னல் சம்பவம்தான் உலகிலேயே மிக நீளமான மின்னல் தாக்குதல்.
உலக வானிலை அமைப்பு (டபிள்யு.எம்.ஓ.) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அந்த மூன்று மாநில மின்னலின் மொத்த நீளம் 768 கி.மீ.! அமெரிக்காவிலுள்ள, டெக்சாஸ், லுயிசியானா மற்றும் மிசிசிபி ஆகிய மூன்று மாநிலங்களின் மேல் வளைந்து நெளிந்து படர்ந்து வெட்டியது அந்த சாதனை மின்னல். இந்த மின்னலின் நீளம், 2018 அக்டோபரில் தெற்கு பிரேசிலில் வெட்டிய சாதனை மின்னலைவிட 60 கி.மீ அதிகம் என டபிள்.யு.எம்.ஓ தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, அந்த அமெரிக்க மின்னல், அதிக நேரம் நீடித்த மின்னல் என்ற சாதனையையும் எட்டியுள்ளது.
சரி, எப்படி இவ்வளவு துல்லியமாக மின்னலை அளக்கிறார்கள்? அமெரிக்கா, சீனா மற்றும் அய்ரோப்பிய செயற்கைக்கோள்களில், மின்னலைப் பற்றி ஆய்வு செய்ய, தொடர்ந்து பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தத் தகவல்களை வைத்தே, டபிள்யு.எம்.ஓ சாதனை மின்னலை அடையாளம் கண்டுள்ளது.
No comments:
Post a Comment