இறுதிமுடிவில் நம்முடைய பூமிக்கு அப்பால், ஒரு மனித காலனியை நிறுவுவதற்கான சாத்தியங்களை நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்கள் மிகவும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றன.
நமது சூரிய மண்டலத்தில், இப்போது பூமிக்கு அப்பால் உள்ள வேற்றுக் கோள்களில் மனிதர்களுக்கான காலனியை உருவாக்குவதற்கான சாத்தியம் உள்ள ஒரே ஒரு கோள் என்றால் அது ரெட் பிளானட் என்று அழைக்கப்படும் செவ்வாய் கோள் மட்டும் தான். ஆனால், செவ்வாயில் இதைச் சாத்தியப்படுத்த சில ஆய்வுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.செவ்வாய்கோள் தற்போது, மிகவும் மெல்லிய வளிமண்டலத்துடன் மிகக் குளிர்ச்சியாக இருப்பதால், இந்த ரெட் பிளானெட்டில் மனிதர்கள் வாழ்வதற்கான சிக்கல்கள் ஏராளமாக இருக்கிறது
ஆனால் இதர கோள்களைப் போல் வாழிட ஆபத்துகள்(கடுமையான புயல், கடுங்குளிர், அதீதவெப்பம் போன்றவை) இல்லாமல் மனிதர்களுக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, செவ்வாயை மனிதர்கள் வாழக்கூடிய பூமி போன்ற உலகமாக மாற்ற சில தீவிர மாற்றங்களை மேற்கொண்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் பல தீர்வுகளை வலியுறுத்தி வருகின்றன.
இதுவரை பல ஆய்வாளர்கள் ஏராளமான தீர்வுகளை முன்மொழிந்துள்ளனர். ஆனால், இப்போது சமீபத்தில் செவ்வாய் கோளை மனிதர்கள் வாழக்கூடிய காலனியாக மாற்றம் செய்ய முதலில் ஒட்டுமொத்த கோளின் இயல்பை வாழக்கூடியதாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு ‘டெராபார்மிங்’ என்று பெயரிட்டுள்ளனர். டெராபார்மிங் என்பது வேற்றுக்கோள் உயிர்களின் உலகத்தை மனிதர்கள் வாழக்கூடிய, பூமி போன்ற இடமாக மாற்றும் செயல்முறையாகும்.
ஆனால் ஆய்வாளர்கள் அதை எவ்வாறு செய்யத் திட்டமிட்டுள்ளனர்? என்பது தான் இப்போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆய்வாளர்களின் கணிப்பை வெற்றிகரமாகச் செயல்படுத்த ஒரு சில சாத்தியமான செயல்முறைகளை நாம் செவ்வாயில் செய்ய வேண்டும்,
இதற்கு ஒரு புதிய மாற்றுத் திட்டத்தை ஆய்வாளர்கள் இப்போது வலியுறுத்தியுள்ளனர். இந்த முயற்சி யின் படி, பூமியைப் போலவே செவ்வாய்க் கோளைச் சுற்றி ‘செயற்கை காந்தப்புலங்களை’ உருவாக்குவதை இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், நாம் பூமியில் உயிருடன் இருப்பதற்குச் சூரியனின் ஒளி எவ்வளவு முக்கியமானதோ, அதை விட நம் பூமியை சுற்றியுள்ள காந்தப்புலங்கள் அதை விட மிகவும் முக்கியமானது.
வலுவான காந்தப்புலங்கள் இருப்பதால் மட்டும் தான் பூமி வாழ்வதற்கு ஏற்றவாறு மாறியது. சூரியக்கதிர்களில் இருந்து பூமியில் உள்ள உயிரினங்களைப் பாதுகாப்பதில் இந்த பாதுகாப்பு காந்தப்புலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. சூரியக் காற்றுடன் சேர்ந்து வெளியிடப்படும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் மிகவும் சக்திவாய்ந்தவை, அவை ஓசோன் படலத்தின் பூமியின் பாதுகாப்பு கவசத்தை அகற்றும்.
செவ்வாயைச் சுற்றி இந்த பாதுகாப்பு காந்தப்புலங்கள் கொண்ட பட்டைகள் இல்லாததால், எதுவும் நீண்ட காலம் செவ்வாய்க் கோளில் உயிர்வாழும் திறனைக் கொண்டிருக்க முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது செவ்வாயில் மனித காலனிகளை அமைப்பதை சாத்தியமற்ற தாக்குகிறது. நாம் கோளைச் சூடாக்கி, வளிமண்டலத்தை உருவாக்கினாலும், அது நிலையானதாக இருக்குமா? என்பது தான் இப்போது கேள்வியாக இருக்கிறது. செவ்வாய் ஒரு காலத்தில் தடிமனான வளிமண்டலத்தில் நீரின் இருப்புடன் இருந்ததாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், வலுவான காந்தப்புலம் இல்லாததால், அங்கு உயிர் வாழக்கூடிய தன்மையை படிப்படியாக இழந்து, முற்றிலு மாக அழிக்கப்பட்ட ஒரு தூசி கோளாக மாறிவிட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால் தான், இது இரண்டாவது சாத்தியமான பூமியை உருவாக்குவதற்கான முதல் படியாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் முன்மொழிந்துள்ளனர். இதனால் தான் இதை ‘பிளானட் பி’ என்று அழைக்கின்றனர். எனவே, செவ்வாயைச் சுற்றி காந்தப்புலங்களைச் சேர்க்கும் இந்த மிக லட்சிய இலக்கை எவ்வாறு செயல்படுத்த ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்? செவ்வாயைச் சுற்றி இந்தக் காந்த கவசங்களை உருவாக்குவது கடினமானது.
அதிலும், குறிப்பாகச் செவ்வாயின் உட்புறம் சிறியதாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது என்பதால் இது இன்னும் கடினமானது. ஆனால், சிவப்பு கோளிற்கு அப்பாலில் இருந்து ஏதாவது உதவி கிடைக்குமா என்று பார்க்கும் போது, செவ்வாய் சந்திரன் போபோஸ் இந்த வட்டத்திற்குள் வருகிறது. போபோஸ் செவ்வாய் கோளைச் சுற்றி 8 மணி நேரத்திற்கு ஒரு சிறிய பயணம் செய்கிறது. கார்னெல் பல்கலைக்கழக ஆய்வில், போபோஸின் மேற்பரப்பில் இருக்கும் அயனியாக்கும் துகள்கள் இந்த பணியைச் செய்ய உதவும் என்று கூறுகிறது. மேலும், துகள்களை முடுக்கி பிளாஸ்மா டோரஸை உருவாக்கலாம் என்று கூறியுள்ளனர். கோளைச்சுற்றி வரும் வளைய வடிவ மேகங்கள் போபோஸின் சுற்றுப்பாதையில் அமைந்துள்ளது. இதன் விளைவாக, செவ்வாயைப் பாதுகாக்க ஒரு வலுவான காந்தப்புலம் உருவாக்கப்படும். முன்னதாக, ஆய்வாளர்களால் முன் மொழியப்பட்ட சில யோசனைகளில் தரை அடிப்படையிலான அல்லது சுற்றுப்பாதை சோலனாய்டுகள் மூலம் இது உருவாக்கப்படும் திட்டங்களும் இதில் அடங்கும். ஏராளமான சவால்களை ஆய்வாளர்கள் சமாளிக்க வேண்டும்.
இந்த பெரிய அளவிலான திட்டத்தைச் செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்கச் சவால்களில் ஒன்று உள்ளது. இருப்பினும், விண்வெளி ஆராய்ச்சியில் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன், இதுவும் விரைவில் யதார்த்தமாக மாறக்கூடும். உங்களுக்குத் தெரியாது, ஒருவேளை நமது தலைமுறை செவ்வாயில் காலடி எடுத்து வைப்பது மட்டுமல்லாமல், அங்கு ஒரு காலனியை நிறுவிய முதல் நபராக இருக்கவும் இப்போது வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. இந்த புதிய திட்டங்கள் விவரங்கள் சமீபத்தில் ஆக்டா ஆஸ்ட்ரோனாட்டிகா இதழில் வெளியிடப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment