ஆவடி, பிப்.6, ஆவடி மாவட்டம் கோயில்பதாகையில் வசிக்கும் ஜானகிராமன் - சுசிலா இணையர்கள் 40 ஆம் ஆண்டு மணநாளை கடந்த 3-2-2022 வியாழன் அன்று எளிமையாக வீட்டிலேயே கொண்டாடினர்.
மாவட்டத்
தலைவர் பா.தென்னரசு தலைமையில்
தோழர்கள் நேரில் சென்று இணையர்களுக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்தும், 2017 ஆம் ஆண்டு உண்மை வாசகர்
வட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ”பெரியார் மட்டும் பிறந் திருக்கா விட்டால்?” எனும் தலைப்பில் பேசிய உரைப் புத்தகங்களை வழங்கியும் சிறப்பித்தனர்.
இந்த
மகிழ்வைக் கொண்டாடும் முகத்தான், இணையர்கள் இருவரும் ‘விடுதலை’, ’உண்மை’, ’பெரியார் பிஞ்சு’ இதழ்களுக் கான ஆண்டு சந்தாக்களைக் கொடுத்து மகிழ்ந்தனர்.
மாவட்டத்
தோழர்கள் வை.கலையரசன், நகரத்தலைவர்
கோ.முருகன், நகரச் செயலாளர் இ.தமிழ்மணி, மாவட்ட
இளைஞரணித் தலைவர் வெ.கார்வேந்தன், முருகேசன்,
கன்னடபாளையம் தமிழரசன், ஆவடி அ.சங்கர், விஜயநம்பி,
தி.மு.க. தலைமைக்
கழகப் பேச்சாளர் க.மு.ஜான்
ஆகியோர் உடனிருந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment