புற்று நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை : பேராவூரணி அரசு மருத்துவர்கள் சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 2, 2022

புற்று நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை : பேராவூரணி அரசு மருத்துவர்கள் சாதனை

அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினர்.

பேராவூரணி, பிப்.2- அபூர்வ வகை புற்றுநோயால் பாதிக்கப் பட்ட ஏழை விவசாயக் கூலித் தொழிலாளிக்கு, பேராவூரணி அரசு மருத்துவமனையில், சிக்க லான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி, அரசு மருத்துவர்கள் சாதனை படைத் துள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி அருகே உள்ள ருத்திர சிந்தாமணி அருகே உள்ள பழுக் காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 70), விவசாயக் கூலித் தொழிலாளி.  கடந்த சில மாதங்களாக இவருக்கு இடது காலில் ஆறாத புண் இருந்துள்ளது. மேலும், கால் மற்றும் இடுப்பு கீழ் பகுதியில் கடுமையான வலி இருந்துள்ளது. இதையடுத்து, அவர் பேராவூரணி அரசு மருத் துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள், காயம் ஆறாத நிலையில், உட லில் உள்ள திசுவை (பயாப்ஸி) பரிசோதனைக்கு அனுப்பினர்.

இதில், அவருக்கு வீரியம் மிக்க கரும்புற்று நோய் (விகிலிமிநிழிகிழிஜி விணிலிகிழிளிவிகி) தாக்கி இருப்பது உறுதி செய்யப் பட்டது. இந்த வகை புற்றுநோயா னது தோலில் ஏற்படும் புற்று நோயாகும். மேலும், அரிதான இந்த புற்றுநோய், லட்சம் நபர்களில் 2 பேரை மட்டுமே பாதிக்கும் தன்மை வாய்ந்தது. தொழிலாளி அருணாச்சலத் திற்கு ஏற்பட்ட புற்றுநோயானது,  கீழ்பாதத்தின் தோலில் ஏற்பட்டு, அவரது கால் முழுவதும் பரவி, இடுப்பு  பகுதியில், பெரிய ரத்த நாளங்களை சுற்றி உள்ள அனைத்து நிணநீர் முடிச்சுகள் வரை பரவி, பெரும் வேதனையை அளித்தது. 

மிகவும் வறிய நிலையில் இருந்த கூலித் தொழிலாளியான அருணாச்சலம் குடும்பத்தினர் இதனால் துடித்துப் போயினர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பேராவூரணி அரசு மருத்துவ மனை தலைமை மருத்துவர் பாஸ்கர், மருத்துவர்கள் பிர சன்ன வெங்கடேசன், தம்பு.சுதா கர் ஆகியோர் கலந்தாலோசனை செய்து, சிக்கலான நிலையில் இருந்த அருணாச்சலத்திற்கு பேராவூரணி அரசு மருத்துவ மனையிலேயே அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய் தனர். நடுத்தர தாலுகா அரசு மருத்துவமனையில், அறுவைச் சிகிச்சை அரங்கில் போதிய வசதி இல்லாத நிலையிலும், சவாலாக எடுத்துக் கொண்டு, இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய வேண்டும் என மருத்துவர்களால் தீர் மானிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜனவரி 2 ஆம் தேதி அருணாச்சலம், பேராவூரணி அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு முதற் கட்ட பரிசோதனைகள் செய்யப் பட்டது. தொடர்ந்து அவருக்கு ஜன.5 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பேராவூரணி அரசு மருத் துவமனை தலைமை மருத்து வரும், அறுவைச் சிகிச்சை நிபுணருமான பாஸ்கர், அறுவை சிகிச்சை மருத்துவர் பிரசன்ன வெங்கடேசன், மயக்க மருந்து நிபுணர் தம்பு சுதாகர் மற்றும் புற்றுநோய் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் மைக்கேல் ராஜீவ், செவிலியர்கள் சித்ரா, விமலா மற்றும் மருத்துவப் பணி யாளர்கள் சவாலான சிகிச் சையை சுமார் 5 மணி நேரம் போராடி, வெற்றிகரமாக செய்து முடித்தனர். இதில் புற்றுநோய் கட்டி முழுமை யாக அகற்றப்பட்டது மேலும் அது பரவிய திசுக்கள் நிணநீர் முடிச் சுகள் முழுவதும் அகற்றப் பட்டது. கட்டி அகற்றப்பட்ட காலுக்கு, பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மூலம் புதிய தோல் பொருத்தப் பட்டுள்ளது.

தஞ்சையில் மருத்துவமனை நடத்தி வரும், பிரபல புற்றுநோய் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணரான ராஜீவ் மைக்கேல், தனது சக மருத்துவர்களுக்காக நட்பு அடிப்படையில், சேவை மனப்பான் மையுடன், எவ்வித ஊதியமும் பெறாமல் அறுவை சிகிச்சையில் முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.  தனியார் மருத்துவமனை யில் பல லட்சம் ரூபாய் செலவில் செய்யப்படும் இந்த சிகிச்சை முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் செய்து முடிக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இவ்வகையான அறுவைச் சிகிச்சை, அனைத்து வசதிகளும் நிறைந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மட்டுமே செய்யப் பட்டு வந்த நிலையில், தமிழ் நாட்டிலேயே முதன் முறையாக தாலுகா அளவிலான மருத்துவ மனையில் செய்யப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுபோன்ற ஏழைத் தொழி லாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்தது தங்களுக்கு மன திருப்தியை தந்ததாக அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். 

இந்நிலையில், தொடர் சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய  அருணாச்சலம் 30.1.2022 அன்று வீடு திரும்பினார். 

சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு 

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கூலித் தொழிலாளிக்கு, பழங்கள் வழங்கி ஆறுதல் கூறிய பேராவூரணி சட்டமன்ற உறுப் பினர் என்.அசோக்குமார், அறுவைச் சிகிச்சையை வெற்றி கரமாக செய்த, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைப் பாராட்டி பயனாடை அணி வித்தார். 

நோயாளிக்கு பழம் வழங்குகிறார் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் அருகே மருத்துவர்கள் பாஸ்கர், பிரசன்ன வெங்கடேசன்




No comments:

Post a Comment