மூத்த குடிமக்களின் வாழ்வாதாரம் காக்க வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும்:மக்கள் நலன் கருதி எல்.அய்.சி. பங்கு விற்பனையை கைவிட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 7, 2022

மூத்த குடிமக்களின் வாழ்வாதாரம் காக்க வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும்:மக்கள் நலன் கருதி எல்.அய்.சி. பங்கு விற்பனையை கைவிட வேண்டும்

  ஒன்றிய அரசுக்கு வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை, பிப்.7 மூத்த குடிமக்களின் வாழ்வாதாரம் காக்க வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும். மக்கள் நலன் கருதி எல்.அய்.சி., பங்கு விற்பனையை ஒன்றிய அரசுகைவிட வேண்டும் என இந்திய ஸ்டேட் வங்கி மேனாள் தொழிற்சங்க தலை வர்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பி.இராமன் வலியுறுத்தியுள்ளர்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்:

ஓய்வூதியம் கடந்த 30 ஆண்டு களாக சீரமைக்கப் படாமல் நான்கு லட்சம் வங்கி ஓய்வூதியர்கள் உடல் நலக்குறைவோடு நலிந்தும் மெலிந் தும் தாங்க முடியாத துயரத்துக்கு உள்ளாகி வருகின்றனர் நாளும் உயர்ந்து வரும் 6 சதவிகித பணவீக்கத்தை ஈடுகட்டும் வகையில் 14 கோடி மூத்த குடிமக்களுக்கு வங்கி வட்டி விகிதத்தில் ஒரு சதவிகிதம் உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக் கையை நிதியமைச்சர் நிராகரித்தி ருப்பது, நாடும், நிறுவனங்களும் வளர்ச்சி பெற உழைத்தவர்கள் சமூக கழிவாக கருதப்படுகிறார்களோ என்ற எண்ணத்தை உருவாக்கி யுள்ளது.

கடந்த 1956 ஆம் ஆண்டு 5 கோடி மூலதனத்தில் துவக்கப்பட்ட எல்.அய்.சி நிறுவனம் கடந்த 65 ஆண்டுகளில் ஒன்றிய அரசுக்கு 28605 கோடியை வழங்கியுள்ளது. கடந்த பன்னிரண்டு அய்ந்தாண்டு திட்டங்களுக்கு 35 லட்சம்

கோடியை மூலதனமாக வழங்கி யுள்ளது.

அத்தகைய மிகப்பெரும் மக்கள் நலம் சார்ந்த பொதுத்துறை நிறுவன மான எல்.அய்.சியின் பங்குகளை ஒரு லட்சம் கோடிக்கு விற்பனை செய்யும் ஒன்றிய அரசின் முடிவை ஒன்றிய நிதியமைச்சர் தாமதமின்றி கைவிட வேண்டும்.

மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசு மக்கள் நலனுக்கு எதிராக செயல்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment