தஞ்சையில் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், மூத்த வழக் குரைஞருமான நண்பர்
எஸ். சிங்காரவடிவேலு அவர்கள் உடல் நலக் குறைவால் நேற்று (31.1.2022) காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.
சிறந்த பண்பாளர் - எவரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் பழகும் பான்மையர்.
நம்மிடத்தில் மாறாத அன்பும் கனிவும் கொண்டு பழகிய நண்பர்.
அவரது சகோதரர் எஸ்.சிவசுப்பிரமணி அய்.ஏ.எஸ். (ஓய்வு), அவரது மகள் நமது பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் படித்த பழைய மாணவி.
இப்படி அக்குடும்பத்தினருடன் பழக்கம் உடைய நமக்கு அவரது இழப்பு பெரும் இழப்பாகும்.
அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், எடமேலையூரிலுள்ள அவரது உறவுகளுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் கூறுகிறோம்.
திராவிடர் கழகம்
சென்னை
1-2-2022
No comments:
Post a Comment