உலகில் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. அதே நேரம், பெரும்பாலான நாடுகளில் உடல் பருமன் ஒரு சவாலான போக்காக மாறியுள்ளது. இந்த இரண்டுக்கும் தொடர்பு இருக்கலாம் என்கின்றனர், நார்வே அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
நாம் உணவு மற்றும் நீரைக் கையாளப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கலன்களில் உள்ள சில வேதிப் பொருட்கள், உடலில் புகுந்து உணவை செரிமானிக்கும் முறையில் இடையூறுகளை ஏற்படுத்துவதாக நார்வே விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதனால், மனித உடலில் கொழுப்பு செல்கள் அபரிமிதமாகப் பெருகி வளர்வதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். தயிர் வைக்கும் பிளாஸ்டிக் பாத்திரம், சமையலறையில் சுத்தம் செய்ய உதவும் ஸ்பாஞ்ச், குடிநீர் பாட்டில்கள் போன்ற அன்றாடம் பயன்படும் 34 விதமான பிளாஸ்டிக் பொருட்களில் உள்ள வேதிப் பொருட்களை அடையாளம் கண்டனர்.
இவற்றில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் இருப்பதையும், அதில் 629 வகைகளை, ஆபத்து விளைவிக்கக்கூடியவை என்று பிரித்தனர். இதிலும் 11 வேதிப் பொருட்கள் மனித செரிமான அமைப்பில் இடையூறு செய்ய வல்லவை என்று தெரிய வந்தது. எனவேதான், பிளாஸ்டிக் கலன்களை உணவு மற்றும் குடிநீருக்குப் பயன்படுத்துவதை அறவே தவிர்ப்பது, உடல் பருமனை குறைக்க உதவக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment