அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி போராட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி போராட்டம்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  - பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட 8 பேர்மீது  2016 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கு ரத்து:

உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பிப்.1- அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடத்தியதாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, பேராசிரியர் சுப. வீரபாண் டியன் உள்ளிட்ட 8 பேர் மீது தொட ரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியின்போது, சென்னை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு முன்பு அனைத்து ஜாதியினரும் அர்ச்ச கராகலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் ஆணையை அமல்படுத்தி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வழிவகை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் பேராசிரியர் சுப.வீரபாண் டியன் உள்ளிட்ட 300 பேர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆயிரம் விளக்கு காவல் நிலைத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, சுப. வீரபாண்டியன் உள் ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய் யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் விசா ரணை நிலுவையில் இருந்து வந்தது.

இந்த நிலையில், தங்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட எட்டுப் பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சு.குமாரதேவன், ’ஜன நாயக ரீதியாகத்தான் போராட்டம் நடந் தது. உச்சநீதிமன்ற உத்தரவை அமல் படுத்தக் கோரிதான் போராட்டம் நடை பெற்றது. மேலும், இந்த வழக்கில் புகார் தாரரே விசாரணை அதிகாரியாக இருந் துள்ளார். எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும்என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, 8 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment