ராமேசுவரம், பிப்.11 இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய் யப்பட்ட ராமேசுவரம், புதுக்கோட் டையை சேர்ந்த 9 மீனவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர்.
ராமேசுவரம் மற்றும் புதுக் கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் பகுதியிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்கச் சென்ற 9 படகுகள் மற்றும் 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத் தனர்.
அதுபோல் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 மீனவர்களும் கடந்த மாதம் 25ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விமானம் மூலம் அனுப்பி வைப்பதற்கான பணிகள் நடைபெற்ற போது மீனவர்கள் அனைவருக்கும் கரோனா பரி சோதனை செய்யப்பட்டது. அதில் அதிகமான மீனவர்கள் கரோனா வால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் அங்கு தனிமையில் தங்கவைக்கப்பட்ட னர்.
இந்த நிலையில் மறு கரோனா பரிசோதனைக்கு பின்னர், 9 மீனவர்கள் மட்டும் இலங்கையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு நேற்று அதிகாலை விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து இறங்கினர். இதில் 6 பேர் ராமேசு வரத்தை சேர்ந்த மீனவர்கள். 3 பேர் புதுக்கோட்டை மாவட்டம் ஜெக தாப்பட்டினத்தை சேர்ந்தவர்கள்.
அவர்கள் 9 பேரையும் மீன் வளத்துறை அதிகாரிகள் ஏற் பாட்டின்படி வாகனங்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
மீதமுள்ள 47 மீனவர்களும் விரைவில் தமிழ்நாடு அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment