புதுடில்லி, பிப்.6- நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, ஒன்றிய அரசுத் துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய பணியாளர் நலத்துறை இணைய மைச்சர் ஜிதேந்திர சிங், எழுத்துப் பூர்வமாக பதிலளித் துள்ளார். அதில், 2018_-2019 மற்றும் 2020_-2021ஆம் ஆண்டுகளில் பணியாளர் தேர்வாணை யம் (Staff Selection Commission - SSC), ஒன்றிய பணியா ளர் தேர்வாணையம் (Union Public Service Commission- UPSC) மற்றும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் (Railway Recruitment Boards - RRB) ஆகிய மூன்று பெரிய பணியாளர் தேர்வா ணையங்கள் மூலம் 2 லட்சத்து 65 ஆயிரத்து 468 பணியா ளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் 1 அன்றைய நில வரப்படி, ஒன்றிய அரசுத் துறைகளில், தற்போது 8 லட் சத்து 72 ஆயிரத்து 243 பணியிடங்கள் காலியாக உள்ளன. சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்தும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத் திலேயே (UPSC) 485 காலிப் பணியிடங்கள் உள் ளன. காலிப் பணியிடங்களை நிரப்புவது ஒரு தொடர் நடவடிக்கையாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது'' என்று ஜிதேந்திரசிங் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment