புதுடில்லி, பிப்.2 கடந்த 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதையடுத்து பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அனுமதித்தன. இந்நிலையில், கரோனாதொற்று ஏற்பட்டு 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. ஆனால் கரோனா பரவுவது இன்னும் முடிவடையவில்லை.
இதனிடையே வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் சைக்கீ என்ற இணையதளம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. 4 கண்டங்களைச் சேர்ந்த 100-க்கும்மேற்பட்ட நிறுவனங்கள், நிறுவனங்களின் தலை வர்கள், சமூக வலைதளங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள், நேர்முகத் தேர்வுகள், கலந்துரையாடல் விவாதங்கள் மூலம் இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளதாக சைக்கீ தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்ற 82% ஊழியர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்து பணியாற்றுவதால் மன அழுத்தம் குறைந்து விரும்பியபடி பணியாற்ற முடிவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருந்து பணியாற்றுவதால் கூடுதலாக பணியாற்ற முடிவதாகவும் 64% ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment