நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60 ஆயிரம் பேர் போட்டியிட மனு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 5, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60 ஆயிரம் பேர் போட்டியிட மனு


சென்னை, பிப்.5 தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்தது. நேற்று (4.2.2022) வரை 60 ஆயிரத்துக்கும் மேற் பட்டவர்கள் மனுக்களை தாக்கல்  செய் துள்ளனர். இன்று மனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது.

தமிழ்நாட்டில்கடந்த 2011ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடை பெற்றது. 11 ஆண்டுகளுக்கு பிறகுதற் போது மீண்டும் நகர்ப்புற உள் ளாட்சி தேர்தல் நடத்தப்படு கிறது.

தமிழ்நாட்டில்உள்ள 21 மா நகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கு தேர்தல் நடத்தப்படு கிறது. 1,374 மாநகராட்சி கவுன் சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு வருகிற 19ஆம்தேதி தேர்தல் நடை பெறுகிறது.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட் டணிக்கும், அ.தி.மு.க. கூட்ட ணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.

இதுதவிர பிரதான அரசியல் கட்சிகளில் இடம் கேட்டு கிடைக்காதவர்களும், உள்ளூ ரில் தங்களுக்கு உள்ள செல் வாக்கை கருத்தில் கொண்டும் சுயேச்சையாக பலர் களம் இறங்கி உள்ளனர். இதனால் இந்த தேர்தலில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல்

தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 28ஆம்தேதி தொடங்கியது. குறுகிய காலத்தில் தேர்தல் தேதி அறி விக்கப்பட்டதால் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலை யிலும் அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு விவகாரத்தில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் வேட்பாளர்களை அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. 

கடந்த 3 நாட்களாகவே அனைத்துக்கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வந்தன. 

நேற்று வேட்பு மனு தாக்க லுக்கு கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுதாக்கல் செய்யும் இடங்களில் வழக்கத்தைவிட கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பல இடங்களில் வேட்பாளர் களுடன் அவர்களது ஆதரவா ளர்கள் திரண்டு வந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவலர்கள் திண றினர்.

மாலை 5 மணிக்கு முன்னதாக வந்த வேட்பாளர்களுக்கு டோக் கன் வழங்கப்பட்டு அதன்பிறகு அவர்களின் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. நேற்று மட்டும் 27 ஆயிரம் பேர் வரை வேட்பு மனுத்தாக்கல் செய்ததாக தோதல் கமிஷன் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி மொத்தம் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வேட்புமனு பரிசீலனை

இன்று (சனிக்கிழமை) வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வார்டு வாரியாக இந்த பணி நடக்கிறது. வேட்புமனு பரிசீலனையின் போது வேட்பாளர், முன் மொழிபவர் அல்லது வேட்பாள ரால் அங்கீகரிக்கப்பட்ட நபர் என யாராவது ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு வருகிற 7ஆம்தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். மாலை 3 மணிக்கு பிறகு தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.


No comments:

Post a Comment