துபாய், பிப்.4 பலூன் அலங் காரங்கள், வேடிக்கையான அம்சங் களுடன் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங் கியது.
துபாய் சுகாதார ஆணையத்தின் அறிவிப்பின்படி தடுப்பூசி மய்யங் களில் 5 வயது மேற்பட்ட குழந்தை களுக்கான பைசர் பயோஎன்டெக் தடுப்பூசி போடும் பணிகள் தொடங் கியது.
அமீரகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசி அளிக்க ஒப்புதல் வழங்கப் பட்டது. அதனை தொடர்ந்து சினோபார்ம் தடுப்பூசியை சிறுவர் களுக்கும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
துபாயில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியானது வழங்கப்பட்டு வருகிறது. இதில் அமீரக குடிமக்கள், துபாயில் குடியிருப்பு விசா பெற்று வசிப்பவர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது சுகாதார ஆணையத்தின் சார்பில் 5 வயதுக்கு மேற்பட்டோருக்கு பைசர் பயோ என்டெக் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. சுகாதார ஆணை யத்தின் செயலியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்ய தொடங்கினர்.
அதனை தொடர்ந்து துபாய் சுகாதார ஆணையத்தின் கீழ் செயல்படும் பல்வேறு தடுப்பூசி மய்யங்களில் பைசர் பயோஎன்டெக் தடுப்பூசி 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு போடும் பணி தொடங்கியது. தடுப்பூசி மய்யங் களில் குழந்தைகளை கவரும் விதத் தில் வண்ணமயமான பலூன் களுடன் கூடிய அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
சுவர்களில் குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன் ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தது. ஊத் மெத்தாவில் உள்ள தடுப்பூசி மய்யத்தில் ஊசி செலுத்திக்கொண்ட சிறுவர், சிறுமிகளை மகிழ்ச்சிப்படுத் தும் விதமாக முகத்தில் ஓவியங்கள் வரையப்பட்டது.
முன்பதிவு செய்து கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தை களுக்கு 10 முதல் 15 நிமிடங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டு வந்த தாக தெரிவித்தனர். மேலும் மய்யங் களில் செய்யப்பட்டுள்ள வேடிக்கை யான பல்வேறு அம்சங்கள் குழந்தை களை வெகுவாக கவர்ந்துள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment