கரோனாவுக்கு எதிராக 5 கோடி கோர்பிவேக்ஸ் தடுப்பூசி கொள்முதல்: ஒன்றிய அரசு முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 6, 2022

கரோனாவுக்கு எதிராக 5 கோடி கோர்பிவேக்ஸ் தடுப்பூசி கொள்முதல்: ஒன்றிய அரசு முடிவு

புதுடில்லி, பிப்.6 கரோனாவுக்கு எதிரான 5 கோடி கோர்பிவேக்ஸ் தடுப்பூசிகளை வாங்குவதற்கு ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் குழந்தைகள் நல மருத்துவமனை, ஹூஸ்டன் பெய்லர் மருத்துவ கல்லூரி, டைனாவேக்ஸ் டெக்னால ஜிஸ் ஆகியவை கூட்டாக உருவாக் கியுள்ள கரோனா தடுப்பூசி கோர் பிவேக்ஸ் ஆகும்.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் அய்தராபாத்தை சேர்ந்த பயால ஜிக்கல் நிறுவனம் தயாரித்து வழங்க உரிமம் பெற்றுள்ளது.

இந்த ஆர்.பி.டி. புரத தடுப்பூசிக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப் பாட்டு இயக்குநரகம் அவசர பயன்பாட்டு ஒப்புதலை வழங்கி உள்ளது.  இந்த தடுப்பூசியை 28 நாள் இடைவெளியில்செலுத்த வேண்டும். இதை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையில் வைக்க வேண்டும்.

5 கோடி டோசுக்கு ஒப்பந்தம்

இந்த தடுப்பூசியின் 5 கோடி டோஸ்களை விநியோகம் செய்வ தற்கு பயாலஜிக்கல்- நிறுவனத் துக்கு ஒன்றிய அரசு ஆர்டர் வழங்கி உள்ளது.

இந்த 5 கோடி தடுப்பூசி ஆர்டரை ஒன்றிய அரசின் சார்பில் பொதுத் துறை நிறுவனமான எச்.எல்.எல். லைப்கேர், பயலாஜிக்கல்- நிறுவனத்துக்கு கடந்த ஜனவரி மாத இறுதியில் வழங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த தடுப்பூசியின் விலை ஒரு டோசுக்கு சரக்கு, சேவை வரியின்றி ரூ.145 என தகவல்கள் கூறுகின்றன.

இந்த தடுப்பூசியை எந்த பிரிவினருக்கு செலுத்துவது என்பதை ஒன்றிய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

இருப்பினும், முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளை தற்போது சுகாதார பணியாளர்களுக்கும், முன் கள பணியாளர்களுக்கும், இணை நோயுடைய மூத்த குடிமக்களுக்கும் செலுத்தி வரும் நிலையில், இதை விரிவுபடுத்துவது தொடர்பாக தொழில் நுட்பக்குழுக்களிலும், சுகா தார அமைச்கத்தின் நோய்த்தடுப்பு பிரிவிலும் விவாதிக்கப்படுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரி விக்கின்றன.

No comments:

Post a Comment