காங்கோ, பிப்.4 காங்கோவில் அகதிகள் தங்கியிருந்த முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 59 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கோவில், அகதிகள் தங்கியிருந்த முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 60 பேர் உயிரிழந்ததாக, உள்ளூரை சேர்ந்த மனிதநேய குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டில், இடுரி மாகாணத்தில் அகதிகள் தங்கியிருந்த சவோ முகாமில், கோட்கோ என்ற பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
சில ஆண்டுகளாக இந்த அமைப்பினரின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். ஆயிரகணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி வேறு பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக அய்க்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தற்போது நடந்த தாக்குதலில் 59 பேர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment