உலகம் முழுவதும் 57 நாடுகளில் அதிவேகமாக பரவும் “ஒமைக்ரான்” உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 4, 2022

உலகம் முழுவதும் 57 நாடுகளில் அதிவேகமாக பரவும் “ஒமைக்ரான்” உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா, பிப்.4  உலகம் முழுவதும் 57 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் பரவ தொடங்கிய ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத் தியது. இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக ஒமைக்ரான் வைரசால் 3ஆவது அலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து ஒமைக்ரான் வைரஸ் பிஏ.1, பிஏ 1.1, பிஏ.2 மற்றும் பிஏ.3 எனவும் உருமாற்றம் அடைந்ததாக உலக சுகாதார மய்யம் அறிவித்தது.  உலகம் முழுவதும் பரவியுள்ள ஒமைக்ரான் வைரஸில் 96 சதவீத வைரஸ்கள் பிஏ.1 மற்றும் பிஏ 1.1 ஆகிய உருமாற்ற வகைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உருமாறிய ஓமைக்ரான் பிஏ.2 என்ற துணை மாறுபாடு உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவ தாகவும், இதுவரை 57 நாடுகள் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு  எச்சரித்துள்ளது.

மேலும், 10 வாரங்களுக்கு முன்பு கரோனாவின் ஓமைக்ரான் மாறுபாடு தோன்றியதில் இருந்து, இதுவரை ஒன்பது கோடிக்கும் அதிகமானார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் பதிவான மொத்த பாதிப்பை விட அதிகம் என்றும், கடந்த ஒரு மாதத்தில் உலகம் முழுவதிலும் இருந்து எடுக்கப் பட்ட மாதிரிகளில் 93 சதவீதம் ஓமைக் ரான் வகையைச் சேர்ந்தவை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில், ஒமைக்ரானின் BA.1, BA.1.1, BA.1, BA.3  என்ற வெவ்வேறு மாறுபாடு வந்துள்ளன. இவற்றில், BA.1 மற்றும் BA.1.1 ஆகியவை அடையாளம் காணப் பட்ட முதல் ஒமைக்ரான் ஆகும். BA.2  மாறுபாடு கரோனா மாதிரிகள் சோத னையில் கூட பல முறை தெரியவில்லை என்று கூறப்படுகிறது. எனவே விஞ்ஞானிகள்  BA.2 அய் ஒமைக்ரானின் துணை திரிபு என்று கூறினார்.

BA.2 இன் மரபணு அடையாளம் ஓமைக்ரானில் இருந்து சற்றே வித்தியாச மானது. இது சோதனை செய்வதை கடினமாக்குகிறது. கரோனா மாதிரி சோதனை மூலம் கூட இந்த மாறு பாட்டைக் கண்டறிவது கடினம் என கூறப்படுகிறது. ஓமைக்ரானை விட அதிக பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனால், அதிதீவிரமாக பரவக்கூடியது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகிலேயே டென்மார்க் நாட்டில் புதிய ஓமைக்ரான் வைரசால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டென்மார்க் நாட்டில்  தினமும் பதிவாகும் கரோனா வைரசில் 82 சதவீதம் புதிய உருமாறிய ஓமைக்ரான் BA.2 என்று தெரிய வந்துள்ளது. ஓமைக்ரான் வைரசை விட 1.5 மடங்கு வேகமாக பி..2 உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவக்கூடியது என தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment