இந்தியா-இலங்கை இடையே கடல் பகுதியில் பதற்றமான சூழல் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 3, 2022

இந்தியா-இலங்கை இடையே கடல் பகுதியில் பதற்றமான சூழல் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகப்பட்டினம், பிப்.3 இந்தியா-இலங்கை இடையே கடல் பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக நாகை மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று (2.2.2022) முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இது தொடர் பாக சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

நாகை அக்கரைப்பேட்டை மற்றும் காரைக்கால் கோட் டுச்சேரி பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் நேற்றுமுன் தினம் சிறை பிடிக்கப்பட்டனர்.

இதனால் இந்தியா-இலங்கை கடல் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து நாகை மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் அவர்களது படகுகள் அனைத் தும் நாகை கடுவையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும். அப் போதுதான் தாங்கள் நிம் மதியாக தங்களது தொழிலை செய்ய முடியும் என்று மீன வர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நாகை மீனவர்கள் கூறியதாவது:-

இலங்கை மீனவர்கள் உயிரிழந்தனர்

இலங்கையை சோந்த 2 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது மர்மமான முறையில் இறந்தனர். இதற்கு தமிழ்நாடு மீனவர்கள்தான் காரணம் என இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டி, போராட் டங்கள் நடத்தி வருகிறார்கள்.

இந்த பதற்றமான சூழ் நிலையில் நாகை மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 21 தமிழ் நாடு மீனவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய் தனர்.

பதற்றம் நிலவுகிறது

இந்த சம்பவத்தை தொடர்ந்து கடல் எல்லையில் இலங்கை மற்றும் தமிழ்நாடு மீனவர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படக்கூடிய பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண வலியுறுத்தியும், நாகை மாவட்ட மீனவர்கள் நாகை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத் திடம் தெரிவித்தனர்.

அதைக்கேட்ட அதிகா ரிகள், கடல் எல்லையில் பதற்றம் தணியும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத் தினர். அதிகாரிகளின் அறிவு ரையை ஏற்று நாகை மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லா மல் வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இதன் காரணமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. இதனால் 1000 விசைப்படகுகள், 5 ஆயிரம் பைபர் படகுகள் கடுவையாற் றில் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளோம் என்றனர்.

No comments:

Post a Comment