வாசிங்டன், பிப். 28- சீனாவில் 2019ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா பாதிப்பு உலக நாடுகளில் பரவி தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, ரசியா உள்ளிட்ட வல்லரசுகளும் தப்ப வில்லை. அந்நாடுகளில் தினசரி லட்சம் எண்ணிக்கையில் பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்நிலையில், டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஒமைக்ரான் என பல்வேறு திரிபு களும் பாதிப்புகளை அதிகரித்து வருகின்றன.
கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழு வதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43.57 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 43,57,91,336 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 36,61,56,426 பேர் குணமடைந் துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 59 லட்சத்து 67 ஆயிரத்து 748 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா தொற்றுக்கு தற்போது 6,36,67,162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 75,613 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு- 8,05,67,757, உயிரிழப்பு - 9,73,119, குணமடைந்தோர் - 5,31,92,990
இந்தியா - பாதிப்பு - 4,29,24,102, உயிரிழப்பு - 5,13,812, குணமடைந்தோர் - 4,22,97,296
பிரேசில் - பாதிப்பு - 2,87,68,104, உயிரிழப்பு - 6,49,195, குணமடைந்தோர் - 2,61,83,623
பிரான்ஸ் - பாதிப்பு - 2,26,89,332, உயிரிழப்பு - 1,38,135, குணமடைந்தோர் - 2,06,66,313
இங்கிலாந்து - பாதிப்பு - 1,88,04,765, உயிரிழப்பு - 1,61,224, குணமடைந்தோர் - 1,71,53,253
அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-
ரசியா - 1,62,91,116
ஜெர்மனி - 1,47,28,752
துருக்கி - 1,40,25,181
இத்தாலி - 1,27,64,558
ஸ்பெயின் - 1,09,77,524
அர்ஜெண்டீனா - 88,97,178
ஈரான் - 70,40,467
நெதர்லாந்து - 63,32,772
கொலம்பியா - 60,62,701
போலந்து - 56,60,493
No comments:
Post a Comment