ராமேசுவரம், பிப்.1 மூன்று விசைப்படகு களில் மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 18ஆம்தேதி 3 விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்த தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதனிடையே ஒரு மாதத்திற்கு மேலாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 43 பேரையும், கடந்த 27ஆம்தேதியன்று விடுதலை செய்து நீதிமன்றம் உத்தர விட்டது. 43 மீனவர்களும் யாழ்ப்பாணத் தில் இந்திய துணை தூதரக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் ராமேசுவரத்தை சேர்ந்த 43 மீனவர்களையும் விமானம் மூலம் தமிழ்நாடு அனுப்பும் பணிகள் நடை பெற்று வந்தன. அதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு 43 மீனவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட் டது,. இந்த பரிசோதனை முடிவில் மீனவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து 43 மீனவர்களும் இலங்கையில் உள்ள கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கரோனா பாதிப்பில் இருந்து மீனவர்கள் அனைவரும் குணமடைந்த பின்னர் விமானம் மூலம் தமிழ்நாடு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment