40 ஆண்டுகளில் முதல் முறையாக அய்.நா. பொதுச்சபையின் அவசரக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 28, 2022

40 ஆண்டுகளில் முதல் முறையாக அய்.நா. பொதுச்சபையின் அவசரக்கூட்டம்

நியூயார்க், பிப். 28- உக்ரைன் மீதான ரசியாவின் போர் 5ஆவது நாளாக தொடர்ந்து கொண்டிருக் கிறது. இந்த நிலையில், உக்ரைன் மீதான ரசியா வின் போர் நடவடிக் கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க அய்.நா.பாது காப்பு கவுன்சிலின் சிறப்பு அவசரக் கூட்டம் இன்று நள்ளிரவு கூடுகிறது .

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற அய் .நா. பொதுச் சபையின் கூட்டத்தில், அமெரிக்கா மற்றும் அல்பேனியா நாடுகள் இணைந்து ரசியாவுக்கு எதிராக அய்க்கிய நாடு கள் அவையில் தீர்மானத்தை கொண்டு வந்தன.

இதனை தொடர்ந்து, ரசியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது 15 நாடுகள் கொண்ட அய் .நா. பொதுசபையின் பாது காப்பு கவுன்சில் கூட்டத் தில் வாக்கெடுப்பு நடை பெற்றது.

இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கவுன்சிலில், 11 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தன. ஆனால்,  சீனா, இந்தியா, அய்க்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்களிக் கவில்லை.

இந்த நிலையில், ரசியா - உக்ரைன் போர் குறித்து விவாதிக்க அய்.நா. பொது சபையின் 11ஆவது சிறப்புக்கூட்டம் இன்று (28.2.2022) இரவு  (இந்திய நேரப்படி 8.30 மணிக்கு) கூடுகிறது. 40 ஆண்டுக ளில் முதல் முறையாக அவசரக்கூட்டம் நியூ யார்க்கில் நடைபெறுகி றது. இந்த கூட்டத்தில் ரசியாவுக்கு கடும் நெருக் கடி கொடுக்கும் வகையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ள தாக தெரிகிறது.

No comments:

Post a Comment