மதிப்பு குறைவாக நிர்ணயிக்கப்பட்ட ஆவணங்களுக்கு 3 மாதங்களுக்குள் மதிப்பு நிர்ணயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 6, 2022

மதிப்பு குறைவாக நிர்ணயிக்கப்பட்ட ஆவணங்களுக்கு 3 மாதங்களுக்குள் மதிப்பு நிர்ணயம்

சென்னை, பிப்.6 பதிவுத்துறை இயக்குநர் சிவன்அருள் அனைத்து சார் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநில கணக்காயர் உடன் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற தணிக்கை குழு கூட்டத்தில் கூறப்பட்டதற்கு இணங்க இந்திய முத்திரை சட்டம் 1899 பிரிவு 47 (1)இன் கீழ் அனுப்பப்படும் ஆவணங்கள் மீது மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை), தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோர் காலதாமதமாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உகந்த காலவரையினை ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

எனவே, பதிவு அலுவலர் உரிய சந்தை மதிப்பினை நிர்ணயம் செய்திட வேண்டிய ஆவணங்களை 15 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அலுவலர் அனுப்ப வேண்டும். இவ்வாறு பெறப்படும் ஆவணங்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் படி  அறிவிப்பினை ஆவணதாரர்களுக்கு பதிவஞ்சல் மூலம் மாவட்ட வருவாய் அலுவலர் அனுப்பிட வேண்டும். படிவம்  அறிவிப்பிற்கு ஆவணதாரர் ஆட்சேபனை அளித்தால் அதனை பரிசீலித்து விசாரணை மேற்கொண்டு கள ஆய்வு செய்து  உரிய தற்காலிக ஆணை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு ஆவணதாரரிடம் இருந்து பதில் ஏதும் பெறாத நிலையில் 21 நாட்களுக்குள் இட ஆய்வு செய்து  தற்காலிக ஆணை பிறப்பிக்க வேணடும்.  அறிவிப்பிற்கு ஆட்சேபனை ஆவணதாரரிடம் இருந்து பெறப்படின் அதனையும் கருத்தில் கொண்டு இறுதியாணை பிறப்பிக்க வேண்டும். நிர்ணயம் செய்த தற்காலிக மதிப்பிற்கு ஆவணதாரர்கள் குறைவு முத்திரை தீர்வை செலுத்தும் நிலையில்  உரிய சான்றிட்டு ஆவணத்தை சார்பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். மேலும், இறுதியாக  அறிவிப்பு அனுப்பிய தேதியில் இருந்து 3 மாதங்களுக்குள் மதிப்பு நிர்ணய நடவடிக்கைகள் முடிந்து இறுதி ஆணை பிறப்பித்து பதிவஞ்சலில் ஆவணதாரருக்கு சார்பு செய்திட வேண்டும்.

 

 

விடுதலை’, ’உண்மை’, ’பெரியார் பிஞ்சுசந்தாக்கள் வழங்கல்

ஆவடி, பிப்.6, ஆவடி மாவட்டம் கோயில்பதாகையில் வசிக்கும் ஜானகிராமன் - சுசிலா இணையர்கள் 40 ஆம் ஆண்டு மணநாளை கடந்த 3-2-2022 வியாழன் அன்று எளிமையாக வீட்டிலேயே கொண்டாடினர்.

மாவட்டத் தலைவர் பா.தென்னரசு தலைமையில் தோழர்கள் நேரில் சென்று இணையர்களுக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்தும், 2017 ஆம் ஆண்டு உண்மை  வாசகர் வட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்பெரியார் மட்டும் பிறந் திருக்கா விட்டால்?” எனும் தலைப்பில் பேசிய உரைப் புத்தகங்களை வழங்கியும் சிறப்பித்தனர்.

இந்த மகிழ்வைக் கொண்டாடும் முகத்தான், இணையர்கள் இருவரும்விடுதலை’, ’உண்மை’, ’பெரியார் பிஞ்சுஇதழ்களுக் கான ஆண்டு சந்தாக்களைக் கொடுத்து மகிழ்ந்தனர்.

மாவட்டத் தோழர்கள் வை.கலையரசன், நகரத்தலைவர் கோ.முருகன், நகரச் செயலாளர் .தமிழ்மணி, மாவட்ட இளைஞரணித் தலைவர் வெ.கார்வேந்தன், முருகேசன், கன்னடபாளையம் தமிழரசன், ஆவடி .சங்கர், விஜயநம்பி, தி.மு.. தலைமைக் கழகப் பேச்சாளர் .மு.ஜான் ஆகியோர் உடனிருந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment