சிவகளை, பிப்.2 தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்காக இடத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் சிவ களையில் 3-ஆம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிவகளையில் தமிழ்நாடு தொல் லியல் துறை சார்பில் 2 கட்ட அக ழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற 2ஆம் கட்ட அகழாய்வின் போது பரம்பு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட பொருட்களும், வாழ்விடப் பகுதி களில் 300-க்கும் மேற்பட்ட பொருட் களும், 48 முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
குழந்தைகள் விளையாடும் வட்ட சில்கள், பெண்கள் அணியும் காதணிகள், சதுரங்கக் காய்கள், நூல் நூற்கப் பயன்படும் தக்களி, சுடுமண் ணால் செய்யப்பட்ட முத்திரைகள், சுடுமண் பந்து, சுடுமண் சக்கரம், பட்டை தீட்டும் கற்கள், எலும்பு களால் ஆன கூர்முனைக் கருவிகள், அம்மி குழவி, கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள், பாசிமணிகள், சீன நாட்டு நாணயம், வாள், கத்தி என ஏராளமான பொருட்கள் கிடைத்தன. ஆவாரங் காடு திரட்டு பகுதி யில் சுடாத செங்கற்களால் எழுப்பப்பட்ட கட்டுமானம், பராக்கிரம பாண்டி திரட்டில் செங்கற்களால் கட்டப் பட்ட கழிவுநீர் வடிகால் என, முக்கியத்துவம் வாய்ந்த தடயங்களும் கண்டு பிடிக்கப்பட்டன. மூலக்கரை பகுதியில் கல்வட்டங்கள் கிடைத் தன. முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்ட நெல்மணிகளை ஆய்வு செய்ததில், அவற்றின் வயது 3,200 ஆண்டுகள் என்றும், தாமிர பரணிக்கரை பொருநை நாகரிகத் தின் வயது 3,200 ஆண்டுகள் என்றும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிவகளையில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. அகழாய்வு மேற் கொள்ளக் கூடிய இடங்களை தூய்மைப் படுத்தும் பணிகள் மேற் கொள்ளப் பட்டன. சிவகளை அகழாய்வு கள இயக்குநர் பிரபாகர் தலைமையில், தொல்லியல் அலுவ லர்கள் விக்டர் ஞானராஜ், பரத் மற்றும் சுதாகர் ஆகியோர் மேற்பார் வையில் இப் பணி நடைபெற்றது.
முதுமக்கள் தாழிகள் திறப்பு
ஆதிச்சநல்லூரில் கண்டு பிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் சமீபத்தில் ஒன்றிய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் முன்னிலையில் திறக்கப்பட்டன. அவற்றில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள், தாடை, பற்கள் இருந்தன.
முதுமக்கள் தாழியில் இருந்த தாடை மற்றும் பற்கள் மூலம் பழங்கால மனிதனின் காலத்தையும், வாழ்க்கை முறை யையும் கண்டு பிடிக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment