புதுடில்லி, பிப்.6 சந்திரயான்-3 வருகிற ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்று ஒன்றிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர்
அலுவலகம், ஊழியர் நலன், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி, விண்வெளி துறையின் ஒன்றிய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம், நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-
இந்திய
விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2இல் இருந்து கற்றுக்கொண்டது மற்றும் தேசிய அளவிலான நிபுணர்களின் ஆலோசனைகள் அடிப்படையில் சந்திரயான்-3அய் வெற்றிகரமாக்கும் செயல்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பான சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு வருகிற ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
நடப்பாண்டு
தொடக்கத்தில் இருந்து வருகிற டிசம்பர் மாதம் வரை, 8 ராக்கெட் செலுத்தும் திட்டங்கள், 7 விண்கலத் திட்டங்கள், 4 தொழில்நுட்ப செய்முறை திட்டங்கள் உள்பட 19 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நடைமுறையில்
உள்ள பல திட்டங்கள் கரோனா
தொற்று காரணமாக பாதிக்கப்பட்டன. விண்வெளித்துறை சீர்திருத்தங்கள், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தேவையால் பல்வேறு திட்டங்களுக்கு மறுமுன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு
அவர் கூறி உள்ளார்.
போலி
ரேசன் அட்டைகள் வைத்துள்ளோர் பட்டியலில்
உ.பி. மாநிலம் முதலிடம்
புதுடில்லி,
பிப்.6 போலி
ரேசன் அட்டைகள் வைத்துள்ளோர் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளதாக ஒன்றிய அரசு
தெரிவித்துள்ளது.
இந்தியாவில்
பல மாநிலங்களில் போலி ரேஷன் அட்டைகள் இருப்பதால்தான் "ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை" என்ற முறை கொண்டுவரப்பட்டது. இருப்பினும் இந்த திட்டத்தை இன்னும் சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து
ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவலில், இந்தியாவில் அதிக போலி ரேஷன் அட்டைகள் உள்ள மாநிலம் உத்தரப்பிரதேச மாநிலம் என்றும், அம்மாநிலத்தில் மட்டும் 1.70 கோடி போலி ரேஷன் அட்டைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
தகவல் பெரும் அதிர்ச்சியை பொதுமக்களுக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோயாளிகளுக்கு
தலைமுடி கொடை
சென்னை,
பிப்.6- புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் தலைமுடியை இழந்த பெண்களுக்கு தலைமுடி கொடையை க்ரீன் ட்ரெண்ட்ஸ் துவங்கியுள்ளது. உலக புற்றுநோய் நாளன்று சென்னை அடையாறு புற்றுநோய் மய்யத்திடம் 50 விக்குகளை அன்பளிப்பதாக அதுவழங்கியது. விரைவில் மேலும் 50 விக்குகளை வழங்க உள்ளது.
கல்லூரி
மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பட்ட பெண்களிடம் கொடையாக பெறப்பட்ட தலைமுடியை கொண்டு இந்த விக் தயாரிக்கப்பட்டுள்ளது. நிறுவன சமூகப்பொறுப்பு திட்டத்தின் கீழ் இந்த விக்குகள் வழங்கப்பட்டுள்ளதாக க்ரீன்
ட்ரெண்ட்ஸ் சலூனின் தலைமை இயக்க அதிகாரி தீபக்
ப்ரவீன் கூறியுள்ளார்.
புற்றுநோய்
பாதிப்பிலிருந்து மீண்டு உயிர்வாழ்கின்ற, வசதி குறைவான நபர்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் வழங்கும் நோக்கோடு கடந்த 5 ஆண்டுகளாக இதை தாங்கள் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில்
ஒருநாள் கரோனா பாதிப்பு
8 ஆயிரத்திற்கு
கீழ் குறைந்தது
சென்னை,
பிப்.6 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,524- பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில்
கரோனா 3ஆவது அலை உச்சம் பெற்று தற்போது குறையத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பு மளமளவென
குறைந்து வருகிறது. அந்த வகையில், நேற்று (5.2.2022) தினசரி கரோனா பாதிப்பு 8 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில்
இன்றைய கரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:
தமிழ்நாட்டில்
கடந்த 24 மணி நேரத்தில் 7,524- பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 04 ஆயிரத்து 762- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில்
இருந்து மேலும் 23 ஆயிரத்து 938- பேர் குணம் அடைந்துள்ளனர்.
கரோனா பாதிப்பால் மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றுப் பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 701- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. சென்னையில் மேலும் 1,223 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment