பையூர் மேனாள் கிளைக்கழகத் தலைவர் ப.பெரியசாமி 3ஆம் ஆண்டு நினைவுநாள் - விடுதலை சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 2, 2022

பையூர் மேனாள் கிளைக்கழகத் தலைவர் ப.பெரியசாமி 3ஆம் ஆண்டு நினைவுநாள் - விடுதலை சந்தா வழங்கல்

பையூர், பிப். 2- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட் டணம் ஒன்றியம் பையூர் திராவிடர் கழக மேனாள் தலைவர் பெரியார் பெருந் தொண்டர் சுயமரியா தைச் சுடரொளி செல்வா மெசின் உரிமையாளர் பையூர் .பெரியசாமி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி 1.2.2022 -மதியம் 1.00 மணியளவில் அவரது நினைவிடத்தில் மாவட்ட கழகத் தலைவர் . அறிவரசன் தலைமை யில் திராவிடர் கழக மாநில அமைப்புச்செய லாளர் ஊமை. செயரா மன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை  செலுத்தி உரையாற்றினார்.

நிகழ்வில் தருமபுரி மண்டலதலைவர்

.தமிழ்ச்செல்வன்,, மாவட்ட கழக மேனாள் தலைவர் பெ.மதிமணி யன்,  தருமபுரி மாவட்டத் தலைவர் பரமசிவம், மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், பொதுக் குழு உறுப்பினர் கோ.திராவிடமணி, .தி.மு.. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெ. மோகன், தி.மு..தலைமை கழக பேச்சாளர் இளைய ராசா, தி.மு..ஒன்றிய துணைச்செயலாளர் இளங்கோவன்,  தமிழ் தேசிய குடியரசு கட்சி மாவட்ட பொறுப்பாளர் தி.குமார், தருமபுரி மாவட்ட மேனாள் தி.. இளைஞரணி தலைவர் காமலாபுரம் இரா.இராசா ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.

நிகழ்ச்சியில்  திராவி டர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிர மணியம், மாவட்ட துணைத் தலைவர் . ஆறுமுகம், ஒன்றியத் தலைவர்கள் காவேரிப்பட்டணம் பெ.செல்வம், மத்தூர் கி. முருகேசன், கிருட்டின கிரி நகரத் தலைவர் கோ.தங்கராசன், தருமபுரி மண்டல .. ஆசிரியரணி அமைப்பாளர் இர.கிருட் டினமூர்த்தி, மேனாள் ஒன்றியத் தலைவர் சி.சீனி வாசன், மாவட்ட இளை ஞரணி மேனாள் தலை வர் இல. ஆறுமுகம், மாவட்ட கழக அமைப் பாளர் தி.கதிரவன், தரும புரி .தி.மு.. ஒன்றிய செயலாளர் சிவபாதம், பையூர் கிளைச் செயலா ளர் சி.இராஜா, ஆம் ஆத்மி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் சு.அன்புச் செல்வன், சரவணபவா னந்தவர் மா, பையூர் தி.மு.. பிரமுகர்கள் ருத்திமணி, சிற்றரசு, .தி.மு..தங்க வேல், மற்றும் குடும்பத் தினர் சின்னபாப்பா, தமிழ்ச் செல்வி, பெ.தமிழ ரசி, செ.கவிதா, எஸ்.ஜெயபாரதி, எஸ்.சங்கவி செ.வீரபாண்டி உள்பட கழகத்தோழர்களும், உற்றார்- உறவினர்களும் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வில் திரளாக கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

பெரியசாமி அவர்க ளின் குடும்பத்தின் சார் பில் அவருடைய மகன் ஒன்றிய கழகச் செயலா ளர் பெ.செல்வேந்திரன் அனைவருக்கும் மதிய உணவு சிற்பாக ஏற்பாடு செய்து வழங்கினார். 

விடுதலை சந்தா

வழங்கல்

அவரது மூன்றாம் ஆண்டு நினைவை போற் றும் வகையில் விடுதலை நாளேட்டிற்கு இரண்டு ஆண்டிற்கான விடுதலை சந்தா தொகையினை மாநில அமைப்புச்செய லாளர் ஊமை. செயராம னிடம் அவர்களிடம் சின் னபாப்பா பெரியசாமி  வழங்கினார், காவேரிப் பட்டணம் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிர மணியம் ஒரு ஆண்டு விடு தலை சந்தாவும், பையூர் கிளைச் செயலாளர் சி.இராசா ஒரு ஆண்டு விடு தலை சந்தாவும் மாநில அமைப்புச் செயலாளரி டம் வழங்கினார்கள்.

குறிப்பு: மறைந்த சுய மரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண் டர் பையூர் .பெரியசாமி அவர்களின் பேரன் மூன் றாம் தலைமுறை கொள்கை வாரிசு செ.வீரபாண்டிக்கு  மொட்டை அடித்து காது குத்தாமல் கழக கொள்கை வாரிசாக இருப்பதற்காக சென்னை பெரியார் திடலில் இயங்கி வரும் திராவிடன் நிதி நிறுவனத்தில் ரூ 25,000 ம் வைப்புநிதியாக செலுத்தியுள்ளார் பெரிய சாமி அவர்கள். அது தற் பொழுது ரூ 75,000/-ஆக உயர்ந்துள்ளது என்று அவரது நினைவு நாளில் கொள்கை பிரச்சார நிகழ் வாக ஏற்பாடு செய்த நிகழ்வில் பெ.செல்வேந்தி ரன் தெரிவித்து நினைவு கூர்ந்தார்.

No comments:

Post a Comment