சென்னை, பிப்.10 தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்றைய (9.2.2022) கரோனா பாதிப்பு விவ ரத்தை மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று 3 ஆயிரத்து 971 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முதல் நாளைய பாதிப்பான 4 ஆயிரத்து 519-அய் விட குறைவாகும். இதனால், தமிழ்நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 24 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து நேற்று 16 ஆயிரத்து 473 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 9 ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 77 ஆயிரத்து 607 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தாக்குதலுக்கு நேற்று 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரி ழந்தோர் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 837 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment