காஷ்மீரில் 370ஆவது பிரிவு நீக்கம் - பார்ப்பனப் பண்டிதர்கள் 1697 பேருக்கு அரசு வேலை வாய்ப்பாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 4, 2022

காஷ்மீரில் 370ஆவது பிரிவு நீக்கம் - பார்ப்பனப் பண்டிதர்கள் 1697 பேருக்கு அரசு வேலை வாய்ப்பாம்!

புதுடில்லி, பிப்.4 காஷ்மீருக்கான 370-ஆவது சிறப்புத் தகுதி சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு பல்வேறு அரசுத் துறைகளில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த 1,697 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட் டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித் துள்ளது.

மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு:

காஷ்மீர் அரசு அளித்துள்ள புள்ளி விவரப்படி, 1,54,712 நபர்களை உள்ள டக்கிய 44,684 புலம் பெயர்ந்த பண்டிட் குடும்பங்கள் ஜம்முவில் உள்ள நிவா ரணம் மற்றும் மறுவாழ்வு ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளன. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் காஷ்மீர் அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் இதுவரை 1,697 பேருக்கு பணி நியமனம் வழங்கியுள்ளது. மேலும் 1,140 பேரை தேர்ந்தெடுத்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.

1990-களில் தீவிரவாதம் காரணமாக காஷ்மீரை விட்டு வெளியேறிய இந் துக்கள் பலருக்கு சொத்துகள் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இந்து குடும்பங் களின் மூதாதையர் சொத்துகளை மீட் டெடுக்க நடவடிக்கை எடுத்து வருவ தாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment