சென்னை, பிப்.11 தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு சற்று குறைந் துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று (10.2.2022) 3 ஆயிரத்து 592 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது.
இது நேற்றைய பாதிப்பான 3 ஆயிரத்து 971 மற்றும் நேற்று முந்தைய நாள் பாதிப்பான 4 ஆயிரத்து 519-அய் விட குறைவாகும்.
இதனால், தமிழ்நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 28 ஆயிரத்து 68 ஆக அதிகரித் துள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து நேற்று 14 ஆயிரத்து 182 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால், தமிழ் நாட்டில் கரோனாவில் இருந்து குணமடைந் தோர் மொத்த எண் ணிக்கை 33 லட்சத்து 23 ஆயிரத்து 214 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர் களில் 66 ஆயிரத்து 992 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர்.
கரோனா தாக்குத லுக்கு நேற்று 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கரோனா வால் உயிரிழந்தோர் மொத்த எண் ணிக்கை 37 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment