மாநில பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற 35ஆவது இணையவழி கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

மாநில பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற 35ஆவது இணையவழி கருத்தரங்கம்

திரைப்படங்களில் தந்தைபெரியார் பகுத்தறிவுக் கருத்துகள்

நடிகவேள் எம்.ஆர்.இராதா, கலைவாணர் குறித்து சிறப்புரை

சென்னை, பிப். 1- பகுத்தறிவாளர் கழ கம் சார்பில் 35ஆவது இணைய வழிகருத்தரங்கம் 23.1.2022  ஞாயிறு  காலை  11  மணிக்கு  இணைய வழியில்  மாநில  பகுத்தறிவாளர்  கழகத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் தலைமையில் நடை பெற்றது.

பகுத்தறிவு  எழுத்தாளர்  மன்ற மாநில துணைத்  தலைவர் சு.. முருகானந்தம் அனைவரையும்  வர வேற்று உரையாற்றினார்.          பகுத்த றிவாளர் கழக மாநில  துணைத் தலைவர் கோபு. பழனிவேல்  தொடக்கவுரை ஆற்றினார்.

"திரையிசைப் பாடல்களில் பகுத்தறிவு சிந்தனைகள்" எனும் பொருளில்  தொலைக்காட்சி  பட் டிமன்ற  நடுவர் பல்கலைச் செல் வன்  உரையாற்றினார்.

இந்த சமூகம், சமூக அமைப்பு, மக்கள் நிலை  இதில்  திரைப்படங் களின் தாக்கம்  என்பது  பற்றி  நகைச்சுவையாகதொடங்கி  உரையாற்றினார். திரையிசைப்  பாடல்கள்  ஆரம்ப  காலத்தில்  எப்படி  இருந்தன,  பின்னர்  அதில் எவ்வாறு  புரட்சி ஏற்பட்டது, எப்படியெல்லாம்கருத்துகள் திணிக்கப்பட்டிருந்தன, அப்படி  திணிக்கப்பட்ட  கருத்துக்களுக்கு  எதிரான பகுத்தறிவு  சிந்தனை  கருத்துக்கள்  எப்படி  இடம்பெற்றன என்பது பற்றிய செய்திகளைக் கூறினார்.  தலைவர் தந்தை பெரியார் கருத்துகள் எவ்வாறெல் லாம் திரை இசைப்பாடல்களில் இடம்பெற்றன, மக்கள்  சிந்திப்ப தற்கு, ஏன், எப்படி என்று கேள்வி கேட்பதற்கு  எவ்வாறெல்லாம்  அவை பயன்பட்டன என்பதை எல்லாம் தெளிவாக எடுத்துரைத் தார். நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களுடைய  திரைப்படங்கள், வாழ்க்கையில்  அவருடைய போராட் டங்கள், திரைப்பட  ஆளுமை, கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பகுத்தறிவு  கருத்துக் கள்,  பாடல்கள் இவற்றையெல்லாம்  கோடிட்டுக் காட்டி, இந்த  மக் களை  மனிதர்களாக, மானமும்  அறிவும்  உள்ளவர்களாக்க அய்யா அவர்கள்  எப்படி  பாடுபட்டார்கள்  என்பதையெல்லாம்  விரிவாக எடுத்துச் சொன்னார்.

மூடத்தனத்தில் மூழ்கிக்  கிடந்த  மக்களை  எப்படியெல்லாம் அய் யாவின் கருத்துகளைச்  சொல்லி தட்டி  எழுப்ப  திரையிசைப்பாடல் கள்  பயன்பட்டன என்பதை  எடுத் துக் காட்டினார்.

தலைவர் முடிவுரைக்கு முன் தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தம் உரையில், பல்கலைச்செல்வன் இன்னும் நிறைய பேச வேண்டும். அடுத்தடுத்த கூட்டங்களில் பங் கேற்று தனது உரையை மூன்று பகுதியாக்கியுள்ளதில், இப்போது அந்த கால பாடல்களை மட்டுமே கூறியுள்ளார். இன்னும் இடைக் காலம்,  தற்காலம் என மூன்று காலத்தையும் பேசவேண்டும் என்ற விருப்பத்தை பதிவு செய்தார்.

இணைப்புரை வழங்கிய மாநில பொதுச்செயலாளர் வி.மோகன் நிகழ்வில் கால மேலாண்மையைக் கடைப்பிடிக்க அனைவரும் ஒத்து ழைக்க வேண்டும் என்ற வேண்டு கோளை வைத்தார்.

நிறைவாக மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.சிவக்குமார்  நன்றி கூறிட இனிதே கருத்தரங்கம் முடிவுற்றது.

No comments:

Post a Comment