சென்னை,
பிப்.6 பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்டத்தை
ஒன்றிய அரசு இதுவரை இயற்றாதது ஏன்? என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பி உள்ளார்.
ஒன்றிய
நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் ஜனவரி 31 ஆம் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
மாநிலங்களவையில்
பேசிய திமுக உறுப்பினர்
ஆர்.எஸ். பாரதி,
‘ஒன்றிய
அரசு, கரோனா காலத்தில் மக்களைக் காக்கத் தவறிவிட்டது.
டில்லியில்
இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் பல கிமீ தூரம்
வரை நடந்தார்கள். ஒரு பெண் தனது குழந்தையுடன் உணவின்றி பல கிலோமீட்டர் தூரம்
நடந்து செல்லும் காட்சியைப் பார்த்திருப் போம். அப்போது ஒன்றிய அரசு என்ன செய்து கொண்டிருந்தது?
முதல்
கரோனா அலையில் இருந்து ஒன்றிய அரசு பாடம் கற்க வில்லை. அடுத்தடுத்த அலைகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநில
அளவில் நிறைவேற்றப் பட்ட திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிப்பதில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக் கிறது.
நீட்
தேர்வில் இருந்து தமிழ்நாட் டுக்கு விலக்கு தேவை; நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா வுக்கு ஒப்புதல் தேவை’ என்று பேசினார். தொடர்ந்து, ஒரு காலத்தில் மருத்துவத்துறையில் 95% பேர் உயர் சமூகத்தை சேர்ந்தவர் களாக இருந் தார்கள்.
இட
ஒதுக்கீட்டுக்காக தமிழ்நாடு கொடுத்த அழுத்தத்தின் காரண மாகவே முதன்முதலில் அரச மைப்புச் சட்டம் திருத்தப்பட்டது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்
தார்.
இதனையடுத்து பெண்களுக் கான 33% இட ஒதுக்கீடு சட்டத்தை
ஒன்றிய அரசு இதுவரை இயற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment