டிஎன்பிஎஸ்சி நிரந்தரப்பதிவுடன் ஆதார் எண் இணைக்க ஏப்.30 வரை கால அவகாசம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 28, 2022

டிஎன்பிஎஸ்சி நிரந்தரப்பதிவுடன் ஆதார் எண் இணைக்க ஏப்.30 வரை கால அவகாசம்

சென்னை,பிப்.28- டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்குடன் (OTR) ஆதாரை இணைப்பதற்கு வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகின்றது. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்கள் தங்கள் டிஎன்பிஎஸ்சி நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை ஜனவரி 28-ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்கெனவே அறிவித்து இருந்தது.

குரூப் 2 மற்றும் 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் மார்ச் 23-ஆம் தேதியுடன் முடிவ டைவதால், அந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும்.

ஏற்கெனவே OTR கணக்குடன் ஆதாரை இணைத்த தேர்வர்கள் மீண்டும் இணைக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment