விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி!

முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவு!

விருதுநகர், பிப். 1- விருதுநகர் பட்டாசு தொழிற் சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்கி முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம்  நாட்டார் மங்கலம் கிராமத் தில் இயங்கிவந்த பட்டாசு தொழிற் சாலை வெடி விபத்தில் ஆறுமுகம் மற்றும் குபேந் திரன் ஆகியோர் உயிரிழந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன், உயிரிழந்தவர் களின் குடும்பத் தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இவ்விபத்தில் காயமுற்ற தெய்வேந்திரன், கணேசபாண்டி ஆகியோருக்கு அரசு மருத்துவ மனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள் ளேன். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சமும், பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தெய்வேந்திரன் அவர் களுக்கு ஒரு இலட்சமும் உடனடியாக முதலமைச் சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.   

No comments:

Post a Comment