தொ.மு.ச. பேரவைப் பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி. அறிக்கை
சென்னை, பிப்.1 தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினருமான மு.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ச் சியாக மக்கள் விரோத சட்டங் களையும், ஜனநாயகத்திற்குப் புறம் பான பல்வேறு நடவ டிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்திய நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கத் தக்க வகையில் ஜாதி, மத மோதல்களை திட்டமிட்டு கட் டமைத்து உருவாக்குகிறது. விவசாயிகளுக்கு விரோதமாக மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, விவசாயிகளின் போராட்டம்
1 ஆண்டுக்கு மேல் நீடித்து சுமார் 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக் களத்திலேயே மரண மடைந்தனர். தொழிலாளர் நலன் காக்கும் 44 சட்டங்களில் 29 சட்டங் களை 4 தொகுப்புக்களாக மாற்றி 15 சட் டங்களை கேட்பாரற்று விட்டு விட்டது. 4 தொகுப்புச் சட்டங் களில் தொழிலாளர்களின் நலன் களை பலியிடக் கூடிய வகையிலும் பெரும் முதலாளிகள் ஆதாயம் அடையும் நோக்கிலும் பிரிவுகள் சேர்க்கப்பட் டுள்ளன. ஒன்றிய பொதுத்துறை நிறுவ னங்களின் பங்குகளை விற்பது, பொதுத்துறை நிறுவனங்களையே விற்பது, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு வழங்க மறுப்பது, வங்கிகள் இணைப்பு என்கிற பெயரில் பொதுத்துறை வங்கி களை ஒழிப்பது, ஆயுள் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது, காப் பீட்டு நிறுவனங்களை விற்பது, பாது காப்புத் துறை தொழிற்சாலைகளை கம் பெனிகளாக மாற்றுவது, பாது காப்புத் துறையில் அந்நிய தலை யீட்டை அனுமதிப்பது போன்ற வைகளும், மோட்டார் வாகன சட்டம் கண்மூடித்தனமாக திருத் தப்பட்டது. மின்சார சட்டம் 2020 நிறைவேற்ற துடிப்பது போன்ற அபாயகரமான செயல்களில் பா.ஜ.க. அரசு தனது சித்தாந்த வேலைப் பாட்டோடு செய்து வருகிறது.
பொருளாதார வீழ்ச்சி, 5 கோடிக்கு மேற்பட்டோர் வேலையிழந்துள்ள அபாயம், கரோனா பெருந்தொற்றின் கோரப்பிடியில் சிக்கி சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் முற்றிலுமாக பாதிப் படைந்துள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வா தாரம் முற்றிலுமாக அழிக் கப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் பாது காக்க சமூகப் பாதுகாப்புத் திட்டங் களை நடைமுறைப்படுத்த எவ்வித முனைப்பும் காட்டுவதில்லை போன்ற பிரச்சினைகளை முன் வைத்து மத்திய தொழிற்சங்க அமைப்புக்கள் மற்றும் வங்கி, இன்சூரன்ஸ், இதர தொழிற்சங்க கூட்டமைப்பு இணைந்து அறிவித்த இரண்டு நாள் பொதுவேலை நிறுத் தம் பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடத்துவது என திட் டமிடப்பட்டு பணிகள் நடை பெற்று வந்தன.
5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், 3 மாநிலங் களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல், வேகமாக பரவி வரும் கரோனா பெருந்தொற்றின் 3ஆவது அலை ஆகிய காரணங் களால் பிரச்சார இயக்கங்களை முன்னெ டுத்துச் செல்வதில் ஏற்பட்டுள்ள தடை ஆகியவற்றை கருத்தில் எடுத் துக் கொண்டு மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப் புக்கள் 28.01.2022 அன்று இணைய வழியாக கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் நாடாளு மன்ற கூட்டத் தொடர் நடைபெறும் மார்ச் மாதம் 28, 29 ஆகிய தேதி களில் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. தொ.மு.ச. பேரவை நிர்வாகிகள். மாவட்ட கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் இணைப்புச் சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்த தேதி மாற்றத்தை கருத்தில் எடுத்துக் கொண்டு தங்கள் மாவட்டத்தில் உள்ள சகோதர தொழிற்சங்கங்களோடு கலந்து பேசி வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய உரிய நட வடிக்கை மேற் கொள்ள தொ.மு.ச. பேரவை சார்பாக கேட்டுக் கொள் கிறோம். இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment