மருத்துவக்கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு: தமிழ்நாடு முதலமைச்சருக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் நன்றி தெரிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 7, 2022

மருத்துவக்கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு: தமிழ்நாடு முதலமைச்சருக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் நன்றி தெரிவிப்பு

சென்னை,பிப்.7- மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அதன் விவரம் வருமாறு, 

அகில இந்திய பிற்படுத்தப் பட்ட வகுப்பு பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, துணைப் பொதுச் செய லாளர் எம்.ஜார்ஜ் பெர்னாண்டஸ் (BOB) மற்றும் செயலாளர் எஸ். அன்பு குமார்  (ICF) ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர் களை இன்று (7.2.2022) நேரில் சந்தித்து, அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் OBCக்களுக்கு 27விழுக் காடு இடஒதுக்கீட்டை பெற்று தந்த மைக்கு நன்றி தெரிவித்தனர். 

அண்மையில் துவங்கப்பட்ட அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்து பணியாற்றிட எங்களது அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பினை அழைத்த மைக்கும் நன்றி தெரிவித்தனர்.

ஓபிசிக்கள் தொடர்பான குறிப்பாக ஜாதிவாரி கணக்கெடுப்பு, கிரீமிலேயர் நீக்கம் போன்றவை உள்ளிட்ட கோரிக் கைகள் அடங்கிய மனுவினையும் அளித்தனர்.

No comments:

Post a Comment